தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தந்தே தீர வேண்டும்.. தமிழகம் அதிரடி கோரிக்கை
டெல்லி: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 64 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தந்தே தீர வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி கண்கணிப்புக்குழு கூட்டம் டெல்லியில் இன்று காலையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ரேம் மோகன் ராவ் பங்கேற்றுள்ளார். மேலும் ஆலோசனையில் கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர முடியாது என டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கர்நாடகம் பிடிவாதம் பிடித்து வருகிறது.
கர்நாடகத்தில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் தர முடியாது என காவிரி மேற்பார்வை குழுவிடம் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவையை விட விவசாயம் பெரிதல்ல என்றும் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்துள்ள தமிழக அதிகாரிகள், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தர வேண்டிய 64 டி.எம்.சி. தண்ணீரை தந்தே தீர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் கோடிக்கணக்கானோரின் பசியை போக்குவது விவசாயம் தான். இது தான் அவர்களது உயிர் மூச்சு. குடிநீரைப் போலவே விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து காவிரியிலிருந்து நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரினர். தமிழக தலைமைச் செயலர் ராம்மோகன ராவ் தலைமையில் தமிழக அதிகாரிகள் தமிழகத்தின் தண்ணீர் தேவையை வலியுறுத்திப் பேசினர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications