வடமாநிலங்களில் உக்கிரமான போராட்டம்.. தமிழக டிரைவர்கள் உணவு, தண்ணீரின்றி குமுறல்.. என்ன நடக்கிறது?
போபால்: கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவில் உள்ள சில பிரிவுகளை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வட மாநிலங்களில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடர் பெரும் சலசலப்புகளுடன் முடிந்தது. எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம், இந்திய தண்டனைச் சட்டம் திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. அதாவது, இந்திய தண்டனை சட்டம் என்பது ஆங்கிலேயர் கால சட்டம் என்று கூறி இதனை மாற்ற மசோதா ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்தது. இது வாக்கெடுப்புக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இந்திய தண்டனை சட்டம் என்பது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' எனவும், இந்திய சாட்சிய சட்டம் 'பாரதிய சாக்சியா' எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், இதில் சில திருத்தங்களையும் அரசு மேற்கொண்டது. அதன்படி, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை, ஹிட் அண்ட் ரன் என்று சொல்லப்படும், சாலை விபத்துகளுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் திருத்தப்பட்டது.
இதுதான் தற்போது பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இந்த வழக்கில் சிக்கினால் 2 வருட சிறை தண்டனைதான் இருந்தது. எனவே இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து, மத்திய பிரதேசம் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் முக்கிய சாலைகள் முடங்கியுள்ளன. போராடும் லாரி டிரைவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்திய நிலையில், டிரைவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், மக்கள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வாகனங்கள் தவிர கேன்களிலும், பெட்ரோல், டீசல்களை நிரப்பி செல்கின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் ஊர் பெயர் தெரியாத இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த லாரி டிரைவர்கள் சிக்கி தவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன. வீடியோவில் தமிழ்நாட்டை சேர்ந்த டிரைவர்கள் பேசியிருப்பதாவது, "மத்தியப் பிரதேசத்தில் நாங்கள் நின்றுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு முன்பு 50 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன, பின்னே 50 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன.
இதை மீறி எதிர் சாலையில் ஏறி சென்றால், கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார்கள். நாங்கள் நடுக்காட்டில் சிக்கியிருக்கிறோம். இங்கு எந்த கடைகளும் கிடையாது, உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம். விபத்து ஏற்படுத்தினால் லட்சக்கணக்கில் அபராதம் கட்ட வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது. லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தால் நாங்கள் ஏன் லாரி ஓட்ட வருகிறோம்? குடும்ப கஷ்டத்தினால்தான் நாங்கள் லாரிக்கு வருகிறோம்.
லட்சக்கணக்கில் அபராதம் செலுத்துவது மட்டுமல்லாது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. 10 ஆண்டுகள் சிறை எனில், எங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள். எதிர்பாராமல் நடப்பதால்தான் அதை விபத்து என்று சொல்கிறோம். இப்படி எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?" என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications