உச்சநீதிமன்றத்தில் கேரளா ஆளுநருக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு வழக்கு தீர்ப்பை முன்வைத்து கடும் வாதம்
டெல்லி: தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கேரளா ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்குக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை உச்சநீதிமன்றம் மே 6-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கேரளாவில் இடதுசாரிகள் அரசு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் ஆளுநராக ஆரிப் முகமது கான் முன்னர் வகித்து வருகிறார்.

ஆரிப்முகமது கான் ஆளுநராக பதவி வகித்த காலத்தில், 2021-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2023-ம் ஆண்டு கேரளா மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.
மேலும் 2024-ம் ஆண்டு மற்றொரு வழக்கையும் கேரளா அரசு தாக்கல் செய்திருந்தது. மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் முடிவுக்கு எதிரானது இந்த வழக்கு.
தற்போது கேரளாவின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலத்திலும் இந்த 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்படவில்லை.
இந்த நிலையில் கேரளா அரசு தாக்கல் செய்திருந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன..
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஎஸ் நரசிம்ஹா மற்றும் ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. கேரளா அரசின் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் ஆஜரானார். முதலில் இதனை கவனிக்காத நீதிபதிகள், உங்களை பார்க்கும் போதெல்லாம் அட்டர்னி ஜெனரல் என்றே அழைத்து பழகிவிட்டோம் என குறிப்பிட்டனர்.
பின்னர் கேகே வேணுகோபால் தமது வாதத்தை முன்வைக்கும் போது, கேரளா அரசு தாக்கல் செய்த 2 மனுக்களுமே உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தமிழ்நாடு அரசு வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.ஆகையால் அந்த தமிழ்நாடு அரசு வழக்கின் தீர்ப்பு இந்த வழக்குக்கும் பொருந்தும் என்றார்.
ஆனால் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர், உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8-ந் தேதி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பு, கேரளா அரசின் வழக்குக்குப் பொருந்தாது; கேரளா அரசின் வழக்கு வேறுபட்ட ஒன்று; இந்த வழக்கை தனித்தே விசாரணை செய்ய வேண்டும்; ஆகையால் மே 6-ந் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மே 6-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரளாவின் தற்போதைய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் கடுமையாக விமர்சித்திருந்தார். நாடாளுமன்றத்தையும் மீறிய அதிகாரம் படைத்ததா உச்சநீதிமன்றம் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications