எர்ணாகுளத்தில் ஹோட்டல் அறை கிடைக்கவில்லை.. கேரள உதவி மையங்களும் இல்லை.. நீட் மாணவர்கள் கடும் அவதி
தமிழகத்திற்கு வெளியே மையங்கள் அமைக்கப்பட்டது ஒரு சிரமம் என்றால், அந்த தடையை தாண்டிய பிறகும், தேர்வு மையங்களை கண்டறிவது மற்றொரு சவாலாக மாறியுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழ் மாணவ, மாணவிகளுக்கு ஹோட்டல் அறைகள் கிடைக்காததால் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். தேர்வு மையங்களை கண்டறிவதற்கும் அவர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளோர் எண்ணிக்கைதான் அதிகம். சுமார் 5300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேர்வு எழுத சென்றுள்ளனர். அதிலும், எர்ணாகுளம் நகரில்தான் அதிகம் பேருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய உதவி மையங்களை ரயில், பஸ் நிலையங்களில் அமைக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இருப்பினும், எர்ணாகுளத்திற்கு இன்று சென்று சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஹோட்டலில் அறைகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நிலைமையை தெரிந்து கொண்ட ஹோட்டல் நிர்வாகங்கள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனவாம். தேர்வு மையங்களை சுற்றியுள்ள விடுதிகளில் அறை வாடகை விண்ணை தொடுகிறது.
இதுகுறித்து எர்ணாகுளத்திலுள்ள மாணவ, மாணவிகள் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பே இங்கு வந்தவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விடுதிகள் கிடைத்துள்ளன. ஆனால், இன்றோ நேற்று இரவோ இங்கு வந்தவர்களுக்கு விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் அதிக கட்டணம் கேட்கிறார்கள் என்று தெரிவித்தனர். மேலும், தேர்வு மையத்தை கண்டறிவது தங்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், இதுபற்றி வழிகாட்ட கேரள அரசு சார்பில் மையங்கள் எதுவுமே இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்திற்கு வெளியே மையங்கள் அமைக்கப்பட்டது ஒரு சிரமம் என்றால், அந்த தடையை தாண்டிய பிறகும், தேர்வு மையங்களை கண்டறிவது மற்றொரு சவாலாக மாறியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications