காவிரி: பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயற்சி- பி.ஆர்.பாண்டியன் உட்பட 50 தமிழக விவசாயிகள் கைது
காவிரி மேலாண்மை வாரியத்தை 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் வீடு முற்றுகையிடப்படும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video

டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டது. வாரியம் அமைப்பதற்கு ஆறு வார கால கெடுவும் அளித்தது.

ஆனால், இதுவரை மத்திய அரசு காவிரி வாரியம் அமைப்பதற்கான எந்தப்பணியும் துவங்கவில்லை. இது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி முதல் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், தமிழக அரசு இனியும் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று பிற்பகல் மூன்று மணிக்குள் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், அதை செயல்படுத்தாவிட்டால் இன்று மாலை தமிழக விவசாயிகள் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அவர்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் வீட்டை முற்றுகையிடச்சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications