தமிழன் தன்மானத்தோடு போராடுவதை விடுத்து தற்கொலை செய்வேன் என்று சொல்வது கோழைத்தனம்: பி.ஆர்.பாண்டியன்
தமிழன் தன்மானத்தோடு போராடுவதை விடுத்து தற்கொலை செய்வேன் என்று சொல்வது கோழைத்தனம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி : தமிழன் எப்போதும் தன்மானத்துடன் போராட வேண்டும். தற்கொலை செய்வேன் என்று சொல்வது எல்லாம் கோழைத்தனம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் கடந்த 26ம் தேதியில் இருந்து டெல்லியில் போராடி வருகிறார்கள். இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இதுவரை காவிரி விவகாரத்தில் எந்தவித நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அதனை எப்படியாவது முடக்கும் முயற்சியில் தான் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழக பாஜக தலைவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று சொல்லி மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், காவிரி வாரியத்திற்காக ராஜினாமா செய்யத் தயார் ஆனால், அதனால் எதுவும் நடக்காது என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசி இருக்கிறார். முதலில் அவர் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரட்டும். அதைவிடுத்து மத்திய அரசைக் காப்பாற்றுவதற்காக தமிழக மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்வேன் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார். மானமுள்ள தமிழன் அப்படி செய்யமாட்டான். தன்மானத்தோடு போராடுவதே தமிழனின் குணம் அதைவிடுத்து தற்கொலை செய்வேன் என்று செய்வது எல்லாம் கோழைத்தனம். முடிந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுகவினர் ஆதரிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்ட போராட்டங்களை தமிழக அரசே முன்நின்று நடத்த வேண்டும். உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். விவசாயிகள் அடுத்து பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட இருக்கிறோம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications