காவிரி.. கொஞ்ச நாட்களாகவே தமிழகத்திற்கு அடி மேல், அடி விழுவதை கவனித்துள்ளீர்களா?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி விவகாரம்..மத்திய அரசுக்கு மே 14-ந் தேதி வரை கால அவகாசம்- வீடியோ
டெல்லி: சமீப காலங்களில் காவிரி வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம் பின்னடைவை சந்தித்து வருகிறது.
காவிரி நடுவர்மன்றம் இறுதி தீர்ப்புக்கு எதிராக தமிழக, கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அன்று முதலே, இந்த பின்னடைவுக்கு ஆரம்ப அத்தியாயம் எழுதப்பட்டது.

நடுவர்மன்றம் 2007ஆம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த தண்ணீரே போதாது என்றுதான் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் தீர்ப்பில் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. அளவு தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. தமிழக பங்கு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. இந்த உத்தரவு 15 வருடங்கள் செல்லுபடியாகும் என்றும் கூறியது.
- தமிழக நீரின் அளவு குறைக்கப்பட்டது மாநில அரசின் வாதத்திற்கு கிடைத்த பெரும் பின்னடைவு.
- உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ஒரு திட்டத்தை அமைக்க 6 வாரம் கெடு விதித்திருந்தது.
- 6 வாரம் கெடு உருண்டோடியும், இன்னும் மத்திய அரசு திட்டத்தை சமர்பிக்கவில்லை. உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை கூட்டிக்கொண்டு உள்ளது. இன்றைய உத்தரவுப்படி வரும் 14ம் தேதி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு மேலும் மத்திய அரசு கால அவகாசம் கேட்டால் என்ன நடக்குமோ அதுவும் தெரியாது.
- கால அவகாசம் காரணமாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின் சூடு ஆறிக்கொண்டுள்ளது. முதலில் மேலாண்மை வாரியம் என்றார்கள், இப்போது திட்டம் என்கிறார்கள், அடுத்து என்னவோ? இதற்கெல்லாம் காரணம், தாமதம்.
- குறைந்தபட்சம் இப்போதைக்கு 4 டிஎம்சி தண்ணீர் வழங்குங்கள் என கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டது. அதை கர்நாடகா செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட்டிலேயே அறிக்கை தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையில் அதற்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்லவில்லை. இது மற்றொரு பின்னடைவு.
- 15 வருடங்களுக்கு மேல்முறையீடே கிடையாது என ஸ்ட்ரிக்டாக கூறிய ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் மிகவும் கறாராக இருக்கும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், 6 வாரங்களுக்குள் திட்டத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை அதை செய்யாத மத்திய அரசுக்கு இன்னும் கோர்ட் குட்டு வைக்கவில்லை. இது தமிழகத்திற்கு பேரிடி.
- கடைமடை பகுதிக்குதான் நதிநீர் உரிமையில் அதிக பங்கு உள்ளது என்பதே உலக நியதி. ஆனால், முதல் முறையாக கடைமடை பகுதியான தமிழகத்தின் கோரிக்கை காவிரியில் தொடர்ச்சியாக புறம்தள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான் நீதிமன்றங்களின் உத்தரவில் தமிழகத்திற்கு எதிரான அடிகள் தொடருகின்றன. தமிழக அரசின் வழக்கறிஞர் குழு தங்கள் வாதத்தை முன்வைப்பதில் சறுக்கி வருவதுதான் உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடுகளுக்கு காரணம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications