தாயார் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தெஹல்கா ஆசிரியருக்கு இடைக்கால ஜாமீன்
டெல்லி: தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க பாலியல் புகாரில் சிக்கி சிறையிலுள்ள தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இறுதி சடங்கு முடியும் வரை தேஜ்பாலை போலீஸ் காவலின் கீழ் வைத்திருக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார்
உடன் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின்பேரில், தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால், கடந்த ஆண்டு நவம்பர் 30ம்தேதி கோவா மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோவா சிறைச்சாலையில் நீதிமன்ற காவலின்கீழ் தேஜ்பால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
கோவா நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவர் ஜாமீன் கேட்டு போட்ட மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டன. சமூக அந்தஸ்து உள்ள தேஜ்பாலால் சாட்சியங்கள் கலைக்கப்பட கூடும் என்ற எதிர்தரப்பு வழக்கறிஞரின்வாதத்தால் தேஜ்பாலுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

தாயார் மரணம்
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தேஜ்பாலின் தாயார் சகுந்தலா, கோாவில் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதி சடங்களில் கலந்துகொள்ள தன்னை இடைக்கால ஜாமீனில் வெளியேவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேஜ்பால் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்தீப் கபூர் இன்று மனு தாக்கல் செய்தார். இறுதி சடங்கு சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் அதுவரைஜாமீனில் வெளியே இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

3 வார காலம் அனுமதி
கோவா மாநில அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் சவுகான் மற்றும் சிக்ரி தலைமையிலான அமர்வு, தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள தேஜ்பாலுக்கு மூன்று வார காலம் அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த காலகட்டத்தில் அவர் போலீஸ் காவலின் கீழ் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாயாரை பார்த்து நலம் விசாரிக்க தேஜ்பாலுக்கு நீதிமன்றம் இதுவரை இருமுறை அனுமதி வழங்கியிருந்தது.

இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி
கோவா மாநில அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் சவுகான் மற்றும் சிக்ரி தலைமையிலான அமர்வு, தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள தேஜ்பாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த காலகட்டத்தில் அவர் போலீஸ் காவலின் கீழ் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாயாரை பார்த்து நலம் விசாரிக்க தேஜ்பாலுக்கு நீதிமன்றம் இதுவரை இருமுறை அனுமதி வழங்கியிருந்தது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications