கோவாவில் தருண் தேஜ்பால்! நாளை காலை வரை இடைக்கால ஜாமீன்!!
டெல்லி: பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்த வழக்கில் டெஹல்கா முன்னாள் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு நாளை காலை 10 மணி வரை பனாஜி அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
சக பெண் பத்திரிகையாளரின் புகாரைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கை கோவா போலீசார் பதிவு செய்தனர். அவர் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் தருண் தேஜ்பால், தமக்கு சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரி கோவா போலீசிடம் கோரியிருந்தார். இதை நிராகரித்த கோவா போலீஸ் அவரை தேடி டெல்லி சென்றது.

டெல்லியில் ரெய்டு
டெல்லியில் உள்ள தேஜ்பால் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அவரை தேடினர். அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் தேஜ்பால் எங்கிருக்கிறார் என தெரியாமல் விழித்தனர் போலீசார்

டெல்லி கோர்ட்டில் வாபஸ்
இந்நிலையில் தருண் தேஜ்பால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக முன் ஜாமீன் வழங்க மறுத்து விசாரணையை ஒத்திவைத்தது.

கோவாவில் முன் ஜாமீன் கோரி மனு
இதனால் நேற்று தமது முன் ஜாமீன் மனுவையும் தருண் தேஜ்பால் திருமபப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் கோவாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் இன்று முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இன்று விசாரணை
இம்மனு மீது கோவா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிச்சயமாக அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார். கோவா போலீஸ் சம்மனை ஏற்று அவர் கால அவகாசம் கோரி கடிதம் கூட அனுப்பியிருந்தார். அவர் சட்டத்தை மதித்து நடக்கக் கூடியவர். அவருக்கு முன்ஜாமீன் கொடுக்கவேண்டும் என்று வாதிட்டார்.

2.30 மணி வரை கைதுக்கு தடை
இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிவரை தருண் தேஜ்பாலை கைது செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டெல்லி ஏர்போர்ட்டில்..
இந்நிலையில் தலைமறைவாக இருந்த தருண் தேஜ்பால் திடீரென பகல் 1 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,கோவா போலீசின் சம்மன் நேற்றுதான் எனக்கு கிடைத்தது. இன்று போலீசில் ஆஜராக செல்கிறேன் என்றார்.

கோவாவில்..
பின்னர் 2.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் கோவா புறப்பட்டு சென்றார். மாலை 5 மணியளவில் அவர் கோவா சென்றடைந்தார். தருண் தேஜ்பாலுடன் அவரது குடும்பத்தினரும் கோவா சென்றனர். அவர் சென்ற விமானத்திலேயே கோவா மாநில போலீஸ் டீமும் டெல்லியில் இருந்து பனாஜி சென்றது.

ஏர்போர்ட்டிலேயே கைது
பின்னர் பனாஜி விமான நிலையத்தில் வந்திறங்கிய தருண் தேஜ்பாலை கோவா போலீசார் சுற்றி வளைத்தனர்.

நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
இந்நிலையில் தேஜ்பாலின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய கோவா நீதிமன்றம் அவருக்கு நாளை காலை 10 மணிவரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து வழங்கியது. அத்துடன் நாளையும் முன் ஜாமீன் மனு மீது விசாரணை தொடரும் என்றும் ஒத்திவைத்தது. இதனால் தேஜ்பாலை கோவா போலீசார் கைது செய்யவில்லை.

போராட்டம்
இதனிடையே தருண் தேஜ்பால் கோவா வரும் செய்தி அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் விமான நிலையத்தில் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.. சிலர் கறுப்புக் கொடியும் காட்டினர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
<center><center><center><center><center><center><center><iframe width="100%" height="315" src="//www.youtube.com/embed/sF9xS8vTXNU" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center></center></center></center></center>












Click it and Unblock the Notifications