சுனந்தாவின் மர்ம மரணம்: சசிதரூரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

TDP wants Shashi Tharoor to be removed from cabinet till probe into Sunanda Pushkar's death gets over
ஐதராபாத்: மத்திய அமைச்சர் சசிதரூர் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், மேலும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் தெலுங்கு தேசம் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளரோடு காதல் என மத்திய அமைச்சர் சசிதரூர் மீது குற்றஞ்சாட்டிய அவரது மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் மரணமடைந்தார், அரசியல் வட்டாரத்தில் அவரது மரணம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சசிதரூரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என லோரிக்கை விடுத்துள்ளார் தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சசிதரூர் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சுனந்தாவின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+