டீ விற்பவரெல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது: மோடியை தாக்கும் சமாஜ்வாடி
ஹார்தோய்: டீ விற்றவர் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி பேரணியில் நரேந்திர மோடி, மத்தியில் ஆளுபவர்களுக்கு வறுமை என்பது தெரியாது. ஆனால் எனக்கு அதனை பற்றி நன்றாக தெரியும். நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது தந்தைக்கு உதவிய நான் ரயில்வே நிலையத்தில் ரயில் டீ விற்றேன். எனவே ரயில்வே அமைச்சரை விட ரயில்வே பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று பேசினார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஹார்தோய்யில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், டீ விற்றவர் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது. கான்ஸ்டபிள் எப்போதும் கான்ஸ்டபிளாகத்தான் நடந்துகொள்ளமுடியும். ஒருபோதும் அவர் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது. நாட்டின் பிரதமர், தேசத்தின் தலைவர் பதவிக்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
தெருக்கூத்தாடிகள் கூட கூட்டத்தை கூட்டுகிறார்கள். அப்படியிருக்கையில் நரேந்திர மோடிக்கு கூட்டம் கூடுவதால் அவரால் பிரதமராக மாற முடியாது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications