நான் தான் நிஜ டீக்கடைக்காரன்: மோடிக்கு போட்டியாக 'சாய் துகான்' திறந்த லாலு
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தான் தான் நிஜ டீக்கடைக்காரர் என்று கூறி சாய் துகான் என்ற பெயரில் டீக்கடை துவங்கியுள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இளம் வயதில் டீக்கடைக்காரராக இல்லை என்றும், தான் தான் நிஜமாகவே டீக்கடைக்காரராக இருந்ததாகவும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

லாலு சாய் துகானில் மக்களுக்கு இலவசமாக டீயும், பிஸ்கட்டும் வழங்கப்படுமாம். மேலும் கடைக்கு வருபவர்களிடம் மோடியின் பொய்யான முகம் பற்றிய தகவல்களை தெரிவிப்பார்களாம் லாலுவின் ஆட்கள்.
மாணவனாக இருந்த காலத்தில் லாலு பிரசாத் யாதவ் அவரது சகோதரரின் கடையில் டீ விற்றாராம். அதனால் தான் தான் நிஜமான டீக்கடைக்காரன் என்று கூறுகிறார் லாலு.
இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள செய்தித் தொடர்பாளர் இக்பால் ஷமி கூறுகையில்,
நாங்கள் லாலு சாய் துகானில் தினமும் மாலை வேளையில் 1000 கப் டீயும், பிஸ்கட்டும் மக்களுக்கு கொடுத்து மோடி பற்றியும், லாலு பற்றியும் தெரிவிப்போம். இது போன்று முசாபர்பூரில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் சாய் துகான் திறப்போம். முசாபர்பூரில் மார்ச் 3ம் தேதி மோடியின் பேரணி நடக்கும் வரையில் சாய் துகான் செயல்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications