குஜராத்தில் களமிறங்கும் கெஜ்ரிவால்- மோடியை ஆதரிக்கப் போகும் ஹசாரே!!
டெல்லி: காலம் மாற காட்சிகளும் மாறின என்பது அரசியல் அரங்கில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் ஆத் ஆத்மி கட்சி களமிறங்கப் போகிறது. அங்கே கெஜ்ரிவாலுக்கு எதிராக மோடிக்கு ஆதரவாக கெஜ்ரிவாலின் குருநாதர் அன்னா ஹசாரேவும் இறங்க இருக்கிறார்.
வலுவான லோக்பால் மசோதா.. ஒற்றை முழக்கத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தார் அன்னா ஹசாரே. அவரது சிஷயரான கெஜ்ரிவாலோ தனியே அரசியல் கட்சியையும் உருவாக்கி டெல்லியில் ஆட்சியையும் அமைக்கிறார்.
இப்போது கெஜ்ரிவால், ஹசாரே என்ற ஊழல் எதிர்ப்புக்கான இரண்டு முகங்களை பயன்படுத்துவதில் பிரதான அரசியல் கட்சிகள் இடையே போட்டா போட்டி உருவாகியுள்ளது.

குஜராத், ஹரியானா
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் மற்றும் ஹரியானாவில் கவனம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக குஜராத்தில் களம் இறங்குகிறது ஆம் ஆத்மி.

ஹசாரேவுக்கு பாஜக ஆதரவு
ஆனால் கெஜ்ரிவாலின் குருநாதர் அன்னா ஹசாரேவுக்கு இப்போது பாஜக வலிய ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ராகுலை பாராட்டி ஹசாரேவும் ஹசாரேவை பாராட்டி ராகுலும் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஹசாரேவை வலிய ஆதரித்துப் பேசியிருக்கிறார்.

திஹாரில் போட்டவர்கள்தானே..
"லோக்பால் மசோதா நிறைவேற ஒரே ஒருநபர்தான் காரணம்...அவர்தான் அன்னா ஹசாரே.. அவரை காங்கிரஸ் கட்சி திஹார் சிறையில் அடைத்துவிட்டு இப்போது பேசுகிறார்களே என்று கொந்தளித்திருந்தார். அத்துடன் ஹசாரேவை புகழ்ந்து தள்ளி பேட்டியெல்லாம் கொடுத்திருக்கிறார் ராஜ்நாத். இதைப் போலவே ஹசாரே தரப்பு முகாமில் இருந்தும் மோடியை புகழ்வது தொடர் பேச்சாகி வருகிறது

மோடிக்கு ஆதரவு
இதை சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், குஜராத்தைத்தான் கெஜ்ரிவால் அடுத்த களமாக வைத்திருக்கிறார். அங்கு கெஜ்ரிவால் கால் பதித்தால் மோடிக்கு ஆதரவாக ஹசாரேவை பாஜக முன்னிறுத்தலாம் என்பதையே காட்டுகிறது என்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications