ஏன்டா என் வீட்டு வாசலில் காரை நிறுத்தின?: தட்டிக் கேட்ட சாப்ட்வேர் என்ஜினியரின் மண்டை உடைப்பு
டெல்லி: டெல்லியில் தனது வீட்டுக்கு முன்பு காரை நிறுத்த வேண்டாம் என்று கூறிய சாப்ட்வேர் என்ஜினியரை 6 பேர் சேர்ந்து செங்கல், இரும்புக் கம்பி, கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள ஷாபூர் ஜாட் பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ் பவார்(32). சாப்ட்வேர் என்ஜினியர். கடந்த சனிக்கிழமை மதியம் பவாரின் வீட்டுக்கு முன்பு வழியை மறித்துக் கொண்டு பக்கத்துவீட்டுக்காரரான ஷ்ராவன் குமாரின் கார் நின்றுள்ளது. இதையடுத்து பவார் குமாரின் வீட்டுக்கு சென்று அவரது காரை தனது வீட்டு வாசலில் இருந்து அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கு ஷ்ராவன் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் சேர்ந்து பவாரை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி பவார் கூறுகையில்,
வழியை மறிக்கிறதே என்று குமாரின் வீட்டுக்கு சென்று அவரது காரை அகற்றுமாறு கூறினேன். ஆனால் யாருமே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மீண்டும் நான் தெரிவித்தபோது குமாரின் சகோதரர் வந்து என்னை திட்டியதுடன், கொன்றுவிடுவேன் என மிரட்டினார். இந்நிலையில் குமாரின் உறவினர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து என்னை தாக்கினர்.
அவர்கள் என் தலையில் மார்பிள் கல்லை போட்டனர், இரும்பிக் கம்பி மற்றும் கட்டையால் என்னை தாக்கினர். இதில் எனது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தேன். என் தலையில் இரண்டு தையல் போட்டுள்ளனர். மேலும் என் கை, கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications