சில தொழில்நுட்ப கோளாறால் ரயில் விபத்து நடைபெற்றுள்ளது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான்
புவனேஷ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனவும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்று இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்தில் சிக்கி தடம்புரண்டது. யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதி பல பெட்டிகள் தடம் புரண்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது.

பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஏறி நசுங்கின. நேற்று இரவு முதல் விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்றது. சிதைந்து கிடந்த ரயில் பெட்டிகளுக்குள் உடல்கள் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன. பல மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்பு பணி தற்போது முடிந்துள்ள நிலையில், 261 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 900 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் பலரும் தீவிர காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட குழு விசாரணை நடைபெறும் எனவும் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் இந்த விசாரணை நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு ஒடிசா மாநிலத்திற்கு இன்று வருகை தந்தார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிரதமர் மோடியும் சற்று நேரத்தில் ஒடிசா செல்ல இருக்கிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இன்று விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன்பின் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான், ஒடிசா ரயில் விபத்து சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில் விபத்து நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பிரதமர் மோடி ஒடிசாவிற்கு வருகை தர இருக்கிறார்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications