13 வயது சிறுமிக்கு கொடூரம்... 7 மாதங்களாக தலைமை ஆசிரியர், மாணவர்கள் உள்பட 18 பேர் மிரட்டி பலாத்காரம்
7 மாதங்களாக 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக பீகாரில் புகார் கொடுக்கப்பட்டது.
Recommended Video

சப்ரா: பீகார் மாநிலத்தில் 13 வயது சிறுமியை 15 மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உள்பட இரு ஆசிரியர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் சப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவரது தந்தை கடந்த ஆண்டு சிறைக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அந்த மாணவியை கடந்த டிசம்பர் மாதம் சகமாணவன் பிளாக்மெயில் செய்து பலாத்காரம் செய்தான். இதையடுத்து 4 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்தனர்.

நாளுக்கு நாள்
இதைத் தொடர்ந்து இந்த பட்டியலில் பள்ளி தலைமை ஆசிரியரும் இரு ஆசிரியர்களும் இணைந்து கொண்டனர். இது போல் அந்த சிறுமியை பிளாக்மெயில் செய்து பலாத்காரம் செய்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

காவல் நிலையம்
இதனிடையே சிறுமியின் தந்தை சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த மாணவி நேராக சப்ரா காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார்.

7 மாதங்கள் தொடர் பலாத்காரம்
அந்த புகாரில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவர்கள் தன்னை 7 மாதங்களாக பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை மகளிர் காவல் நிலையத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனை
புகாரை பெற்று கொண்ட போலீஸார் இது தொடர்பாக தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், இரு மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மீதமுள்ள ஒரு ஆசிரியர், 13 மாணவர்களை தேடி வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications