மீன் குழம்புக்காக சண்டை... உறவினரின் 3 வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த இளைஞர் கைது
மீன் சாப்பாட்டிற்காக குழந்தையைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: மீன் சமைத்து தரவில்லை என்பதற்காக உறவினரின் 3 வயது குழந்தையை தரையில் தூக்கி வீசிய இளைஞரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையின் லால்ஜிபாடா பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப் சாஹா. காய்கறி வியாபாரியான இவருக்கு, மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். ஷெரிபின் வீட்டின் அவரது உறவினரான 19 வயது நவாஸ் சாஹாவும் தங்கியிருந்தார்.

விருந்தாளியான நவாஸ் சாஹா, தான் தங்கியிருப்பதற்கான மற்றும் சாப்பிடுவதற்கான செலவை ஷெரிப்பிடம் மாதாமாதம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில், தமக்கு மீன் சமைத்து தருமாறு ஷெரிப்பின் மனைவியிடம் நவாஸ் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த ஷெரிபுக்கும் நவாசுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் தகராறில் ஈடுபட்டிருந்தபோது, ஷெரிப்பின் மூன்று வயது மகள் குடியாவை, நவாஸ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. நவாஸ் அக்குழந்தையைத் தூக்கி கோபத்தில் தரையில் அடித்துள்ளார். இதில், குழந்தை குடியாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தையை அருகில் உள்ள பொதுமருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நவாஸ் சாஹாவை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications