Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலிகாலம்... 17 வயது மாணவனின் வீடு புகுந்து 2 நாள் "ரூமுக்குள் சேட்டை" .. 21 வயது பெண் கைது!

கேரள மாநிலத்தில் பேஸ் புக் மூலம் காதலித்த 21 வயது இளம்பெண் 17 வயது மாணவரின் வீடு புகுந்து அவருடன் 2 நாட்கள் உள்ளே இருந்து கொண்டு வெளியே வர மறுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவனை பேஸ்புக் மூலம் காதலித்து அவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

எர்ணாகுளம் கண்ணங்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மெடில்டா (21). அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் அழகுகலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோட்டை அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மெடில்டா, மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.

தற்கொலை மிரட்டல்

தற்கொலை மிரட்டல்

இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும் கதவைத் தட்டினர். கதவை திறக்க முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் மிரட்டியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்த போலீஸார் திரும்பி சென்றுவிட்டனர்.

கதவை உடைத்த போலீஸார்

கதவை உடைத்த போலீஸார்

நேற்று முன்தினம் காலை மாணவனின் பெற்றோர் மீண்டும் கதவை தட்டியும் திறக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மீண்டும் போலீஸில் புகார் செய்தனர். எஸ்ஐ லாலு தலைமையில் போலீஸார் விரைந்து சென்று, அறை கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.

இளம்பெண் கைது

இளம்பெண் கைது

இதைத் தொடர்ந்து பெற்றோரின் புகாரின்பேரில் சிறுவனை பலாத்காரம் செய்ததாக மெடில்டாவை போலீஸார் கைது செய்து ராமாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

சிறுவர்கள் காப்பகத்தில் மாணவர்

சிறுவர்கள் காப்பகத்தில் மாணவர்

மாணவனை எர்ணாகுளம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனினும் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று மாணவர் கூறியதால் அவர் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+