For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

17 வயது சிறுமியை வீடு புகுந்து பலாத்காரம்.. 2ஆவது மாடியிலிருந்து சிறுமியை தூக்கி வீசிய கொடூரம்!

Google Oneindia Tamil News

மதுரா: மதுராவில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமியை 2-ஆவது மாடியிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராவில் உள்ளது சாதா என்ற பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை 2ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசியது.

இதில் முதுகு தண்டுவடத்தில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பயங்கர சத்தம்..! மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் வீட்டின் முன் குண்டுவெடிப்பு.. யார் காரணம்பயங்கர சத்தம்..! மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் வீட்டின் முன் குண்டுவெடிப்பு.. யார் காரணம்

மகள்

இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், என் மகளை தூக்கி வீசியவர்கள் என் வீட்டுக்கு அருகே உள்ளார்கள். கடந்த சில மாதங்களாக என் மகளை பின்தொடர்ந்துள்ளனர். திங்கள்கிழமை இரவு எனக்கு அந்த 3 பேரில் ஒருவரிடமிருந்து போன் வந்தது.

பலாத்காரம்

பலாத்காரம்


அப்போது மறுமுனையில் பேசிய நபர் உங்கள் மகளுடன் பேசுங்கள் என கூறினார். அதற்கு நான் மறுத்தேன். உடனே என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் இரவு 8 மணிக்கு எனது வீட்டுக்குள் நுழைய 3 பேரும் எனது மகளை பலாத்காரம் செய்துள்ளனர்.

வீடு

வீடு

மகளை வெளியே தூக்கிச் செல்ல முயன்ற போது வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் எங்கள் வீட்டின் பால்கனியில் இருந்து மகளை தூக்கி வீசினர் என்றார். தப்பியோடிய 3 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

சிசிடிவி

சிசிடிவி

இந்த 3 பேரும் வீட்டுக்குள் சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி சிரிஷ் சந்திரா கூறுகையில் இருவரை கைது செய்துவிட்டோம். இன்னொரு நபரை தேடி வருகிறோம். விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

English summary
17 years old teenage Girl throw off from Second floor in Mathura.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X