டெஹல்கா நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி ராஜினாமா
டெல்லி: டெஹல்கா பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி தனது வேலையை இன்று ராஜினாமா செய்தார்.
டெஹல்கா பத்திரிக்கையின் நிறுவனர் தருண் தேஜ்பால் மீது பெண் ஊழியை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அவர் இந்த புகாரை இமெயில் மூலம் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரிக்கு அனுப்பினார். இதையடுத்து தேஜ்பால் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் அந்த பெண் தனது வேலையை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கோவா போலீசார் இந்த சம்பம் பற்றி வழக்குப் பதிவு செய்து சோமா சவுத்ரி மற்றும் சில ஊழியர்களிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சோமா சவுத்ரி தனது வேலையை ராஜினாமா செய்வதாக இன்று காலை 6 மணிக்கு முன்பு இமெயில் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது,
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் நான் உடனே நடவடிக்கை எடுத்தேன். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குழுவை அமைக்கும் பணி துவங்கியது. அவரது புகார் குறித்து நடவடிக்கை எடுக்க 2 நாட்களே உள்ள நிலையில் இந்த விவகாரம் மீடியாவுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து சில விஷயங்கள் தவறாக பேசப்பட்டது.
நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் விஷயத்தை மூடி மறைக்க முயலவில்லை. இது போன்ற கடினமான நேரத்தில் டெஹல்காவில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் நான் இருப்பது டெஹல்காவுக்கு நன்மையா, தீமையா என்று தெரியவில்லை. எனவே எனது வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications