For Daily Alerts
Just In
டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீஸ் விசாரணை

சக பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ததாக கடந்த சனிக்கிழமை கோவா குற்றப்பிரிவு போலீசாரால் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார் .அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தருண் தேஜ்பால் மகள் தியாவிடம் டோனா பவ்லா அருகே 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பால் குறித்து அவரது மகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதி படுத்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!