தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- சீமாந்திராவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்! வெறிச்சோடின நகரங்கள்!
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தால் ஆந்திர மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பல நகரங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
தனித்தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதற்கு ஆந்திராவின் 13 மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் திருப்பதி, சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பல இடங்களில் வாகனங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். விஜயநகரத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணாவுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஆர்ப்பட்டக்காரர்கள் சூறையாடினர்.
மசூலிப்பட்டினத்தில் முட்டிபோட்டுட்டு போராடிய தெலுங்கு தேசம் கட்சியினருக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. தெனாலியில் சபாநாயகர் மனோகர் வீட்டையும் குண்டூரில் மாநில அமைச்சர் கன்னா லட்சுமி நாராயணா வீட்டையும் முற்றுகையிட முயன்றதை போலீசார் தடுத்தனர்.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சில எம்பிக்களும் அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications