பொது சிவில் சட்டம் - மடாதிபதிகளை ஏன் இழுக்கனும்? மத்திய அரசு மீது தெலுங்கானா சிஎம் கேசிஆர் பாய்ச்சல்
ஹைதராபாத்: பொது சிவில் சட்டம் தொடர்பாக மடாதிபதிகளிடம் மத்திய பாஜக அரசு ஆலோசனை கேட்டிருப்பதற்கு தெலுங்கானா முதல்வரும் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. தற்போது ஜூலை 14 வரை கருத்துகள் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய சட்ட ஆணையத்தின் இது தொடர்பான அறிவிப்பில், மதம் சார்ந்த நிறுவனங்களும் கருத்து தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக உள்ளது.

பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் போது அனைத்து மக்களுக்குமான ஒரே சட்டமாக இருக்கும். சிறுபான்மையினருக்கான தனித்த சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தொடருகிறது.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூறுகையில், மடாதிபதிகள் பூஜைகள் உள்ளிட்டவைகளை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். பொது சிவில் சடத்துக்கு ஏன் மடாதிபதிகளிடம் கருத்து கேட்க வேண்டும். இது தவறான முன்னுதாரணம் என சாடியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications