இடிஞ்சு போன பாஜக.. குஷியில் துள்ளும் காங்கிரஸ்.. தெலுங்கானாவில் அரியணை ஏறும் கதர்கள்.. எக்ஸிட் போல்
சென்னை: எதிர்பார்த்தது போலவே, ஆளும் பிஆர்எஸ்ஸை நொறுக்கி தள்ளிவிட்டு, மேலே வந்துள்ளது காங்கிரஸ். தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளது.
சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இன்று காலையிலிருந்து ஓட்டுப்பதிவு துவங்கியது.. அந்தவகையில் தெலுங்கானாவில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய, தேர்தல் முடிவுகளை, தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
கணிப்புகள்: அந்தவகையில், (ஜன் கி பாத்) JANKI BAAT என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களும், ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 48 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைத்துள்ளது.
அதேபோல, PTS (பிடிஎஸ்) நடத்திய கருத்து கணிப்பில், காங்கிரஸ் 65 முதல் 68 இடங்களும், பிஆர்எஸ் 35 முதல் 40 இடங்களையும், பாஜக 7 முதல் 10 இடங்களையும், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 6 முதல் 7 இடங்களையும், மற்றவை 1 முதல் 2 இடங்களையும் கைப்பற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் காங்கிரஸ்: அதுபோலவே, ARRAA என்ற செய்தி நிறுவனம் நடத்திய கணிப்பில், காங்கிரஸ் கட்சி 58 முதல் 67 இடங்களையும், பிஆர்எஸ் 41 முதல் 49 இடங்களையும், பாஜக 5 முதல் 7 இடங்களையும், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 முதல் 9 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிப்புகள் வெளிவந்துள்ளன.
ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், காங்கிரசுக்கு 58 முதல் 67 இடங்கள் வரையிலும், கேசிஆரின் பிஆர்எஸ்ஸுக்கு 41 முதல் 49 வரையிலும், பாஜகவுக்கு 5 முதல் 7 இடங்கள் வரையிலும், மற்றவை 7 முதல் 9 இடங்கள் வரையிலும் கிடைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணிப்புகள்: இதுவரை வெளியாகியிருக்கும் எக்ஸிட் போல்களில், காங்கிரஸே பிரதான வெற்றியை பெற்றுள்ளது.. ஏற்கனவே அரசியல் நிபுணர்கள் கணித்து சொன்னதைபோல, கேசிஆர் ஆட்சியை இழப்பார் என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் கணிப்புகள் என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போதுதான், நிஜ நிலவரம் தெரியவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications