அறையை பூட்டி விட்டு தீ வைத்த சுரேஷ்.. தப்பிக்க கூட வழியில்லாமல் எரிந்து போன விஜயா ரெட்டி
அறையை பூட்டிவிட்டு சுரேஷ் தீ வைத்து கொளுத்தி உள்ளார்
Recommended Video
அப்துல்லாபூர்மெட், ரங்காரெட்டி, தெலங்கானா: தெலங்கானா பெண் தாசில்தார் விஜயா ரெட்டி இருந்த அறையைப் பூட்டி விட்டு தீவைத்துள்ளார் சுரேஷ் என்ற தகவல் கிடைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெண் தாசில்தார் விஜயா ரெட்டி என்பவரை உயிரோடு தீவைத்து எரித்து விட்டார் சுரேஷ் என்ற விவசாயி. நில ஆவணத்தில் இருந்த தவறை சரி செய்யாமல் தாலுகா அலுவலகம் தாமதம் செய்ததே அவரது கோபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி
இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் நடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி விலகாமல் பேசி வருகின்றனர். இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறுகையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் உள்ளே போன சில நிமிடங்களில் மேடத்தின் கதறல் சத்தம் கேட்டது. அறைக்குள்ளிருந்து புகையும் வந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

கருகிய மேடம்
ஆனால் மேடத்தின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து மேடத்தின் டிரைவரும், மனு கொடுக்க வந்திருந்த ஒருவரும் சேர்ந்து அறையை உடைத்து திறந்து உள்ளே பாய்ந்தனர். அங்கு மேடம் முழுமையாக தீயில் எரிந்து கொண்டிருந்தார். அவர் மீது தீவைத்த நபரும் தீயில் சிக்கியிருந்தார். பதறிப் போன நாங்கள் தீயை அணைக்க எவ்வளவோ முயற்சித்தோம்.

பலன் இல்லை
மேடம் உடலில் பற்றிய தீயோடு வெளியே ஓடி வந்தார். அதற்கு மேல் அவரால் ஓட முடியவில்லை. அப்படியே கீழே விழுந்து கருகி விட்டார். தீயை அணைக்க அவர் மீது நாங்கள் துணியை போட்டோம். ஆனால் பலன் இல்லை என்றனர்.

அதிர்ச்சி
இந்த தாலுக்கா புதிதாக உருவாக்கப்பட்டதாம். அதன் முதல் தாசில்தாரே விஜயா ரெட்டிதானாம். கடந்த நான்கு வருடமாக இங்கு அவர் பணியாற்றி வந்தாராம். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அந்தப் பகுதியே கொந்தளிப்பாக காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு தரத் தவறியதாக போலீஸார் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications