மகள் கண் எதிரில் மனைவி தலைமுடியை பிடித்து இழுத்து போட்டு அடித்த அரசியல்வாதி.. வைரலான வீடியோ
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசியல்வாதி ஒருவர் தனது 2வது மனைவியை கொலை வெறியோடு அடித்து உதைக்கும் காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சியை சேர்ந்த சீனிவாச ரெட்டி (30), என்பவர், தனது 2வது மனைவி சங்கீதா ரெட்டியை அடித்து உதைப்பதாக ஒரு காட்சி தேசிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நெஞ்சை பதற வைக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

படம் பிடித்த சகோதரர்
இந்த வீடியோவை சங்கீதாவின் சகோதரர் மற்றும் இன்னொருவர் செல்போனில் படம் படிதி்துள்ளனர். அதில், சங்கீதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து, தள்ளும் காட்சி நெஞ்சை பதறடிப்பதாக உள்ளது. சங்கீதாவின் இரண்டரை வயது மகளை அவரது தாயார் கையில் ஏந்தியுள்ள காட்சியும் வீடியோவில் உள்ளது.

பதற வைக்கும் காட்சி
தெலுங்கு படத்தில் வரும் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளுக்கு ஈடாக உள்ளது இந்த வன்முறை தாக்குதல். கொஞ்சமும் இரக்கமின்றி சீனிவாச ரெட்டி, தனது மனைவியை அடித்து, கொடுமைப்படுத்துகிறார்.

கொலை முயற்சி
இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில் சீனிவாச ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் 3வதாக ஒரு மைனர் பெண்ணை மணம் முடித்ததாகவும், அதை சங்கீதா தட்டி கேட்டதால் இப்படி அடித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
|
எஸ்கேப் ஆகும் கட்சி நிர்வாகிகள்
சங்கீதா ரெட்டிதான், சீனிவாச ரெட்டிக்கு முதல் மனைவி என கூறப்பட்ட நிலையில் அவர் 2வது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்காமல் மீடியாக்களிடமிருந்து தப்பியபடி உள்ளனர் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி நிர்வாகிகள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications