சபரிமலை சன்னிதானத்தில் மதம் பிடித்த யானை மிதித்து பெண் பக்தர் பலி, ஒருவர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மதம் பிடித்து தறிகெட்டு ஓடிய யானை மிதித்து பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை மிதித்ததில் ஐயப்ப பக்தர் ஒருவரும் காயமடைந்தார். கால்நடை டாக்டர்கள் விரைந்து வந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கட்டுப்படுத்தியுள்ளனர்.

சபரிமலை சன்னிதானத்தில் கடந்த ஆண்டும் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் யானை வல்லபன் விழாவுக்கு வந்த போது மதம்பிடித்து மிரண்டது. எனவே இந்த ஆண்டு வல்லபன் யானையை சன்னிதானம் அழைத்து வர வேண்டாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் யானையை அழைத்து வந்ததாலேயே விபரீதம் நிகழ்ந்து விட்டதாக பக்தர்கள் கூறினர்.

Temple elephant attacks woman pilgrim

கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்துள்ளன.
தங்க ஆபரணங்களுடன் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்துள்ளனர்.

கோவில் யானை வல்லபன்

சன்னிதானத்தில் நேற்று மாளிகைபுரத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சபரிமலை சன்னிதானத்தில் மலையின் கீழ் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் யானை வல்லபன் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்தது.

மிரண்டு ஓடிய யானை

அந்த யானைக்கு தேவஸ்தான ஊழியர்கள் நெற்றிபட்டம் மற்றும் அணிகலன்கள் பொருத்திக் கொண்டிருந்தனர். அப்போது டிராக்டர் ஒன்று அந்த வழியாக வந்தது. அதன் சத்தம் கேட்டதும் யானை திடீரென மிரண்டது. அதனை பாகன் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் யானை சன்னிதானத்தில் தறிக்கெட்டு ஓடியது.

பெண் மரணம்

இதில் சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்தவர்களை, இலகுமன்பாறையைச் சேர்ந்த பெண் பக்தர் பேபி, 68 என்பவரை யானை மிதித்ததுடன், தூக்கி வீசியது. படுகாயம் அடைந்த பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யானை மிரண்டதை கண்டு பக்தர்கள் கூட்டம் அலறியடித்து ஓட்டம் பிடித்தது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி திருச்சூரைச் சேர்ந்த இருமோன்,44 என்பவர் படுகாயம் அடைந்தார்.

மதம் பிடித்த யானை

யானை மிரண்ட தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் விரைந்து வந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கட்டுப்படுத்தினர். மேலும் படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சபரிமலை சன்னிதானத்தில் கடந்த ஆண்டும் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் யானை வல்லபன் விழாவுக்கு வந்த போது மதம்பிடித்து மிரண்டது. எனவே இந்த ஆண்டு வல்லபன் யானையை சன்னிதானம் அழைத்து வர வேண்டாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் யானையை அழைத்து வந்ததாலேயே விபரீதம் நிகழ்ந்து விட்டதாக பக்தர்கள் கூறினர்.

பரிகார பூஜைகள்

சன்னிதானத்தில் நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பரிகார பூஜைகள் நடந்தன. இதையடுத்து சபரிமலையில் அய்யப்பனுக்கு படிபூஜை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக நேற்று பிற்பகல் முதல் பக்தர்கள் 18ம் படியேற அனுமதிக்கப்படவில்லை. மாலையில் 18ம் படிகளிலும் தந்திரி மகேஷ்மோகனரு தலைமையில் விளக்கேற்றி, நாழியில் அரிசி வைத்து வனதேவதைகளுக்கு பூஜை நடத்தப்பட்டது. தீபாராதனையும் காட்டப்பட்டது.
இன்றும் படிபூஜைகள் நடக்கிறது. 21ம்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+