ரூமில் "கள்ள ஜோடி".. பக்கத்திலேயே மனைவி.. தெருவில் நிர்வாணமாக நின்ற கணவன்.. என்னாச்சு தெரியுமா?
கணவனை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற பெண் கைதாகி உள்ளார்
ராய்ப்பூர்: கணவனை, மனைவி நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!
வடமாநிலங்களில் வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன.. ஆளும் அரசு இருந்தும், காவல்துறை இருந்தும், நீதிமன்றங்கள் இருந்தும், பொதுமக்களே சட்டங்களை கையில் எடுத்து விடுகின்றனர்.
கல்வியறிவு பெறாத இந்த மக்களுக்கு, போதுமான அளவு விழிப்புணர்வும் தரப்படாமல் உள்ள நிலையில், அங்குள்ள சில கிராம மக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன.

கள்ளக்காதல்
பெண் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் ஒருபக்கம் இருந்தாலும், கள்ளக்காதல் விவகாரங்களில் கொந்தளித்து விடுகிறார்கள் ஊர்மக்கள்.. நிர்வாணப்படுத்தி ஊருக்கு நடுவில், சம்பந்தப்பட்டவர்களை அசிங்கப்படுத்தி விடுகிறார்கள்.. இப்படித்தான் குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. அந்த கிராமத்தின் பெயர் கஜூரி.. இது ஒரு பழங்குடியினர் வசித்து வரும் கிராமம்.

பழங்குடி கிராமம்
23 வயதுடைய பெண் ஒருவருக்கு, அங்குள்ள அதே பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞருடன் கள்ளக்காதல் வந்துவிட்டது.. இந்த விஷயம் தெரிந்து, அந்த பெண்ணின் மாமியார் வீட்டினரும், ஊர்மக்களும் தண்டனை தந்துள்ளனர்.. ஊருக்கு நடுவில், இந்த பெண்ணை நடுவில் நிற்க வைத்து நிர்வாணப்படுத்தி உள்ளனர்.. பிறகு, ஊர்வலமாக கூட்டி சென்றுள்ளனர்.. இதை பார்த்து பதறி போன அருகில் இருக்கும் வேறு சில பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து மாற்றுத் துணி எடுத்து வந்து தந்திருக்கிறார்கள்..

மாமியார் வீடு
ஆனால், அதை மாமியார் வீட்டினர் பிடுங்கி வீசிவிட்டு, குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லாரும் பார்க்கும்படியாகவே இளம்பெண்ணை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.. கள்ள உறவு வைத்தால் இதுதான் தண்டனை என்று சொல்லி, வீடியோவும் எடுத்து வெளியிட்டனர். பிறகுதான் போலீசுக்கு விஷயம் தெரிந்து அவர்கள் வந்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இங்கே சற்று வித்தியாசமான தண்டனையை தந்துள்ளனர்..

ரகசிய உறவு
சத்தீஸ்கர் மாநிலத்தில், ஃபர்சகான் என்ற பகுதியில் பட்காய் என்ற பழங்குடி கிராமம் உள்ளது.. இங்குள்ள ஒரு நபருக்கு, அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. இந்த நபர் ஏற்கனவே கல்யாணமானவர்.. இவர்கள் இருவருக்கும், கள்ள உறவு இருப்பதாக, அரசல் புரசலாக அவரது மனைவியின் காதுகளில் விழுந்துள்ளது.. அதனால், கணவனை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தார்.. கடந்த 11ம் தேதியன்று, அந்த ஜோடி தனிமையில் இருந்துள்ளது.. அதை இந்த மனைவி கண்ணாலேயே பார்த்து கொந்தளித்து போய்விட்டார்.

நிர்வாணம்
கணவனையும், அந்த பெண்ணையும், கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்... அதுமட்டுமல்ல, அப்போதும் ஆத்திரம் தீராத அந்த பெண், கணவனை நிர்வாணமாக்கியதுடன், அந்த பெண்ணையும் நிர்வாணமாக்கி தெருத்தெருவாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்.. இதனை அந்த கிராமத்தினர் யாருமே வந்து தடுக்காமல், அமைதியாக வேடிக்கை பார்த்தார்களாம்.. போதாக்குறைக்கு இதை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்.

வீடியோ
இந்த வீடியோ, போலீசார் கண்ணில் பட்டு, கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கொண்டேகன் மாவட்ட எஸ்பி திவ்யாங் படேல் இதுகுறித்து சொல்லும்போது, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, காவல்நிலைய குழுவை அனுப்பி வைத்ததாகவும், விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறினார். அதன் பேரில் சம்பவம் நடந்ததை போலீசாரும் உறுதி செய்த நிலையில், கணவனையும், அவரது காதலியையும் தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக மனைவி உட்பட 4 பேரையும் கைது செய்துள்ளார்களாம். அவர்களிடம் விசாரணையும் நடந்து வருவதாக சொன்னார்.. இந்த வீடியோ கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications