"வேலி தாண்டிய வெள்ளாடு".. அந்த பையன் வேணாம்.. கண்ணை உறுத்திய அந்த "சிவப்பு" சூட்கேஸ்.. நடுங்கிய மதுரா
மகளை சுட்டுக் கொன்று சூட்கேஸில் அடைத்து வீசிய தந்தை கைதானார்
கான்பூர்: அடுத்தடுத்த கொலைகள் நாட்டை உலுக்கி வரும் நிலையில், இன்னொரு கொலையும் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. இது ஒரு ஆணவக் கொலை என்பது கூடுதல் அதிர்ச்சியை தந்து வருகிறது.
நம் நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கென புதிய சட்டம் தேவை என்ற பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.. இந்தியாவை பொறுத்தவரையில் சாதி ஆணவ கொலைகளுக்கென தனியாக எந்த சட்டமும் இல்லை.
இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ்தான் கைதுகள் நடக்கின்றன.. அதன்படிதான்தண்டனைகளும் தரப்படுகின்றன. ஆனாலும், தங்களுடைய சாதியை அடிப்படையாக கொண்டு திட்டம் தீட்டி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே, சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடியை மிக மிக கொடூரமாக கொல்வது அதிகமாகி கொண்டே செல்கிறது.

ஆணவ கொலை
அதனால், வெறும் கொலைகளுக்கான தண்டனைகளை தராமல், ஆணவ கொலைகளுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் விடாமல் ஒலிக்கிறது.. இது ஒருபுறம் இருந்தாலும், ஆணவ கொலைகளும் அதிகரித்தபடியே உள்ளன.. நம் தமிழ்நாட்டில் ஆணவ கொலை என்றாலே அரியலூர் மாவட்டம்தான் கண்முன் நிற்கிறது.. அந்த அளவுக்கு ஆறாத ரணங்கள் இந்த மாவட்டத்தில் நடந்துள்ளதை மறுக்க முடியாது.. அதேபோல, வடமாநிலங்களிலும் இதே பிரச்சனைதான் தலைவிரித்தாடுகிறது.. இதில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.. இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சிவப்பு நிற சூட்கேஸ்
மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெரிய சிவப்பு கலர் சூட்கேஸ் கிடந்தது.. அந்த சூட்கேஸ் அங்கேயே நீண்ட நேரமாக இருந்தது.. இதனால், அங்கிருந்த தொழிலாளர்கள், அதை கவனித்துவிட்டு, போலீஸாருக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து, அந்த சிவப்பு கலர் சூட்கேஸை திறந்து பார்த்தனர்.. அதில், பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள்.. அந்த பெண்ணின் முகம், தலையில் ரத்தம் உறைந்து கிடந்தது.. உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன.

சூட்கேஸ்
இதையடுத்து போலீசார் விசாரணையை கையிலெடுத்தனர்.. அப்போதுதான், இறந்துபோன பெண், தெற்கு டெல்லியில் படர்பூரில் வசித்து வருபவர் என்பதும், அவர் பெயர் 22 ஆயுஷி சவுத்ரி என்பதும் தெரியவந்தது... அதுமட்டுமல்ல, அந்த பெண்ணை கொன்றது அவரது பெற்ற அப்பாவே என்பது அடுத்த அதிர்ச்சி வெளியானது.. இதையடுத்து, போலீஸார் அப்பெண்ணின் அப்பா நிதேஷ் யாதவை கைது செய்தனர்.. இது குறித்து மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொலை நகரம்
இதை அங்குள்ள போலீசார் நோட்டமிட்டு, அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.. அப்போதுதான், கொலை செய்த உண்மையை ஒப்புக் கொண்டார்... இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை கண்டுபிடிக்க, தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.. இறந்து போன பெண் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் இனி விசாரணையில் வெளிவர வாய்ப்புள்ளது" என்றார்.. தலைநகரம் கொலை நகரமாகி வரும் நிலையில், உ.பியிலும் இப்படி ஒரு சம்பவங்கள் நடந்து வருவதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர் அம்மக்கள்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications