ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஹிஜ்புல் முஜாஹிதீன் எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் ரியாஸ் நைகூ. இவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பலேவேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டார்.

இதனால் இவர் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் இந்த ஆண்டு மே மாதம் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து அமைப்பின் தலைவராக சயிஃபுல்லா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சயிஃபுல்லா ஸ்ரீநகருக்கு வந்திருப்பதாகவும் அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸார் சயிஃபுல்லாவை சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் முஜாஹிதீன் அமைப்பில் முதலிடத்தில் உள்ள கமாண்டர் சயிஃபுல்லாதான். இவர் தற்போது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது மிகவும் வெற்றிக்கரமான ஆபரேஷன். இது போலீஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மிகப் பெரிய சாதனையாகும் என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications