டெல்லி மெட்ரோ ரயிலைத் தாக்கித் தகர்க்க திட்டம்... 2 தீவிரவாதிகள் கைது
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயிலில் தினசரி சராசரியாக 25 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். எனவே தீவிரவாதிகள் இங்கு தாக்குதல் நடத்தினால் பெரிய உயிர் சேதம் ஏற்படும் என்பதால், மெட்ரோ ரயில் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கண் வைத்துள்ளதாக கடந்த வாரம்தான் நாடாளுமன்ற குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில், உ.பி.யை சேர்ந்த அப்துல் ரகுமான், ஆசீப் ஆகிய இரு தீவிரவாதிகளை, டெல்லி போலீசார், கட்டாக் காவல்துறை உதவியோடு கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு சென்று, தீவிரவாத பயிற்சி பெற்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதோடு, டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களை தகர்க்கும் திட்டத்தோடு இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்விருவரின் கைதால், பெரிய தாக்குதல் அபாயத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் தப்பியுள்ளன. இருப்பினும், எதிர்கால பாதுகாப்பை கருத்தில்கொண்டு, மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கைதான இவரும், அல்கொய்தா மற்றும லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில், சிசிடிவி காமிராக்களை அதிகரிப்பதுடன், ரிசர்வ் போலீசார் துணையோடு பாதுகாப்பு பணிகள் நடைபெறுகின்றன. அதிரடி படையினரை மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications