பயங்கரவாதிகளை கொல்லக் கூடாது.. வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா.. கிளம்பியது சர்ச்சை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய பரூக் அப்துல்லா, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை கொலை செய்யக்கூடாது எனவும் அவர்களை உயிருடன் பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. நேற்று உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உமர் அப்துல்லா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் மூளையாக செயல்படுவர்களை கண்டறிய, பயங்கரவாதிகளை கொல்லாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.
பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பரூக் அப்துல்லா இது தொடர்பாக அளித்த பேட்டியில், "பயங்கரவாதிகளை விசாரிப்பதன் மூலம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் பற்றிய தகவல்களை பெற முடியும். ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடக்கிறதா? என சந்தேகம் உள்ளது.
இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டால் விசாரணை நடத்துவோம். எனவே பயங்கரவாதிகள் கொல்லப்படக்கூடாது. அவர்களை உயிருடன் பிடித்து அவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும். உமர் அப்துல்லா அரசை சீர்குலைக்க முயற்சிக்கும் ஏஜென்சி இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்" என்றார்.
பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் பாஜக, "இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வருகை தருகிறார்கள் என்பது பரூக் அப்துல்லாவுக்கு தெரியும். இது நன்கு அறியப்பட்ட ஒரு உண்மை.
இதில் விசாரணை நடத்துவதற்கு என்ன இருக்கிறது? ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது என்பது பரூக் அப்துல்லாவுக்கு தெரியும். நாம் அனைவரும் நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்க வெண்டும். மனித குலத்திற்கு எதிரான எதிரிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications