ஹெராயின் கடத்தலா? இந்தியா - பாக். எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்.. பிஎஸ்எஃப் அதிரடி
அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வழியா சந்தேகத்திற்கிடமான ஊடுருவிய 2 ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் எல்லை பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. பல முறை இந்திய வீரர்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை ஹெராயின் எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொதுவாக ட்ரோன்கள் இரண்டு விதமாக பயன்படுகிறது. ஒன்று ஒரு பக்க தேவைக்கு மட்டும் இயக்கப்படுகிறது. அதாவது, ஒரு இடத்தை நோட்டம் விடுவதற்காக பயன்படுத்தப்படுவது. அல்லது இருவரின் நோக்கத்திற்காக பயன்படுத்துவது. அதாவது ஒரு பொருளை இரண்டாவது நபரிடம் கொண்டு சேர்க்க பயன்படுத்துவது.

தற்போது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ள ட்ரோன்கள் இரு நபர்கள் சார்ந்து இயங்கக்கூடியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த ட்ரோன் மூலம் கொண்டுவரப்பட்ட போதை பொருளை வாங்க தயாராக இருந்தவர் யார்? உள்நாட்டில் போதை பொருள் சப்ளைக்கு யார் துணையாக இருக்கிறார்கள் என்பது குறித்து ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஊடுருவல் சம்பவம் குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் கூறியதாவது,
"நேற்றிரவு (மே.19) சரியாக 8.55 அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உதர் தரிவால் கிராமத்தின் இருட்டான பகுதியில் ட்ரோன்கள் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ட்ரோன்கள் பறப்பது போன்று சத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து அவர்கள் மற்ற வீரர்களை உஷார்படுத்திய நிலையில், குழுவாக சேர்ந்து ட்ரோனை தேட தொடங்கினர். இதனையடுத்து ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதன் மீது வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சேதமடைந்த ட்ரோன் அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்தது. வீரர்கள் இதனை தேடி கண்டுபிடித்து மீட்டெடுத்துள்ளனர்.
இந்த ட்ரோன் சுமார் 2 கிலோவுக்கும் அதிகமாக ஹெராயின் போதை பொருள் பாக்கெட்டை சுமந்து வந்திருக்கிறது. இந்த ஊடுருவல் முயற்சியையடுத்து எல்லை வீரர்கள் உஷார் படுத்தப்பட்டனர். எதிர்பார்த்தபடி மற்றொரு ட்ரோனும் நேற்றிரவு ஊடுருவ முயன்றுள்ளது. இரவு சுமார் 9.24 மணியளவில் அமிர்தசரஸ் செக்டாரில் இந்த ஊடுருவல் முயற்சி நடந்திருக்கிறது. ஆனால் வீரர்கள் உஷாராக இருந்ததால் இரண்டாவது ட்ரோனும் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோனிலும் ஹெராயின் போதை பொருள் பொட்டலங்கள் இருந்துள்ளன" என்று கூறியுள்ளனர்.
இதுபோன்று ட்ரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இதேபோன்று பல்வேறு ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் பாதுகாப்பு படையினர் அதை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications