'டெய்லி' சிறைக்கு வரும் அதிமுகவினர்.. நேற்று தம்பித்துரை, சசிகலா புஷ்பா வாசலில் உட்கார்ந்து ஆலோசனை!
பெங்களூர்: பெங்களூர் சிறைக்குள் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்க்க யாரையும் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்ற போதிலும் தினசரி சிறைக்கு வருவதை அதிமுகவினர் வழக்கமாக வைத்துள்ளனர். நாமும் வந்தோம் என்று கணக்கு காட்டுவதற்கா அல்லது உண்மையான அக்கறையுடன் வருகிறார்களா என்று தெரியவில்லை.
நேற்றும் கூட நாடாளுமன்ற லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, எம்.பிக்கள் சசிகலா புஷ்பா, மனோஜ் பாண்டியன், நவநீத கிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் விஜய பாஸ்கர், பழனியப்பன், சம்பத், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் வந்திருந்தனர்.
ஆனால் யாரையும் சிறைக்குள் அனுமதிக்கவில்லை அதிகாரிகள்.

வாசலில் உட்கார்ந்து ஆலோசனை
இதனால் தம்பித்துரை உள்ளிட்டோர் சிறை நுழைவாயில் பகுதியில் உள்ள வாசலிலேயே உட்கார்ந்து முக்கிய ஆலோசனை நடத்துவது போல மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

திரண்டு வரும் தொண்டர்கள்
தொடர்ந்து சிறைக்கு தொண்டர்களும், அதிமுக பிரமுகர்களும் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் அனைவருமே வாசல் வரைதான் வர முடிகிறது.

தேங்காய் உடைப்பு
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மூடை நிறைய தேங்காய்களைக் கொண்டு வந்த சிறை முன்பு டமால் டமால் என உடைக்க ஆரம்பித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 101 தேங்காய்களை அவர்கள் உடைத்தனர்.

இப்படியெல்லாம் பண்ணப்படாது...!
இதைப் பார்த்த கர்நாடக போலீஸார், இப்படியெல்லாம் பொது இடத்தில் தேங்காய் உடைக்கக் கூடாது. கிளம்பிப் போங்க என்று கூறினர். இருந்தாலும் 101 தேங்காய்களையும் உடைத்த பிறகுதான் அந்த இடத்தை விட்டு கிளம்பினர் அதிமுகவினர்.

சிங்கிளாக உண்ணாவிரதம் இருக்கும் சென்னை சிங்கம்...!
இதற்கிடையே சிறைப் பகுதியில் சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தனி நபரா சிறைக்கு முன்பாக 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முதல் மாடிக்கு மாற்றமா...!
இதற்கிடையே, ஜெயலலிதாவை முதல் மாடிக்கு மாற்றியுள்ளதாக வந்துள்ள செய்திகளை சிறை டிஐஜி ஜெயசிம்மா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அறையில் தான் இருக்கிறார். அவர் முதல் மாடிக்கு மாற்றப்பட்டதாக வெளியான தகவல் முழுவதும் பொய். இத்தகைய தவறான தகவல்களை தயவுசெய்து யாரும் வெளியிட வேண்டாம். பெரும்பாலும் ஜெயலலிதா தனது அறையை விட்டு வெளியே வருவது இல்லை. அவருடன் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரும் உள்ளனர்.

கோர்ட் முடிவெடுக்கலாம்
ஜெயலலிதாவை தமிழ்நாட்டில் உள்ள சிறைக்கு மாற்றுவது குறித்து கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார் அவர்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications