அதிகாலையில் கொடூரம்! மகாராஷ்டிராவில் ராட்சத கிரேன் விழுந்து மோசமான விபத்து! 17 பேர் பலி!
தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானேயின் ஷாஹாபூரில் உள்ள கட்டுமான தளத்தில் நேற்று இரவு கிரேன் சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கிரேன் விழுந்ததில் அவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து: இடிபாடுகளில் சிக்கிய மேலும் 5 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று அதிகாலை ஷாபூரின் சர்லம்பே கிராமத்திற்கு அருகில் சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலை மூன்றாம் கட்ட கட்டுமானப் பணியின் போது இந்த விபத்து நடந்துள்ளது.
நெடுஞ்சாலைகள், ரயில் பாலங்கள் கட்டுமானங்களின் போது அங்குள்ள பெரிய பெரிய பாறைகளை நகர்த்த இந்த சிறப்பு கிரேன் பயன்படுத்தப்படும். இந்த கிரேனை அங்குள்ள ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல இயக்கியுள்ளனர் அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
என்ன நடந்தது: இது குறித்து போலீசார் கூறுகையில், "இன்று அதிகாலை ஷாபூரின் சர்லாம்பே கிராமத்திற்கு அருகில் சம்ருத்திஎக்ஸ்பிரஸ் சாலை பனிகள் நடந்து வந்தது. அப்போது ஊழியர்களை கிரேனை இயக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிரதமர் இரங்கல்: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த விபத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகிறேன். பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மோசமான விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ₹ 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 வழங்கப்படும்," என்று அது அவர் பதிவிட்டுள்ளார்.
எந்த சாலை: 710 கிமீ நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலை மகாராஷ்டிராவின் இரு முக்கிய நகரங்களான மும்பை-நாக்பூர் நகரங்களை இணைக்கிறது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் சார்பில் இதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் முதல் கட்டம், நாக்பூரை ஷீரடியை இணைக்கும் நிலையில், அதற்கான கட்டுமானம் நிறைவடைந்து அது கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் இரண்டாம் கட்ட கட்டுமானப்பணி இப்போது நடந்து வந்த நிலையில், அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications