வாட்ஸ் அப் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தைத் திருமணம்... ஹைதராபாத்தில்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 15 வயது மாணவியின் திருமணம் ஒன்று வாட்ஸ் அப் உதவியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.
ஹைதராபாத் சரூர் நகரைச் சேர்ந்தவர் பி.விட்டல். இவரது 15 வயது மகள் கீதா. நடந்து முடிந்த 10ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி அடைந்த கீதாவுக்கு மேற்கொண்டு படிக்க ஆசை. ஆனால், அவரது தந்தையோ உறவினர் ஒருவருக்கும், கீதாவுக்கும் திருமணம் ஏற்பாடு செய்தார். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளா விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

நேற்று முன்தினம் சரூர் நகர் ஏ.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாத கீதா, தனது பிரச்சினைகளை கடிதமாக எழுதி அதை செல்போனில் புகைப்படமாக எடுத்து, வாட்ஸ்-ஆப்' மூலம் ஹைதராபாத் நகர போலீசாருக்கு சனிக்கிழமை இரவு 12 மணியளவில் அனுப்பி வைத்தார்.
வாட்ஸ் அப் மூலம் தகவல் அறிந்த எல்.பி. நகர் காவல் துறை துணை ஆணையர் வேணுகோபால், உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சரூர் நகர் போலீசாருக்கும், தாய்-சேய் நலத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட் டார். அதன்பேரில் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் திருமண மண்டபத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தாய்-சேய் நலத்துறை அதிகாரிகள், இரு வீட்டாரின் பெற்றோரிடமும் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications