பெங்களூர் - ஹவுரா ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை..நிம்மதி பெருமூச்சு
புவனேஸ்வர்:பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பும் இல்லை என்று கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் புறப்பட்டு விட்டதாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது, மணிக்கு 127 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

சரக்கு ரயில் மீது மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 17 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் சிதறியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அந்த ரயிலின் சில பெட்டிகள் முற்றிலும் உருகுலைந்துள்ளன. 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸில் 3 பெட்டிகள் மட்டுமே விபத்தில் சிக்கியதால் சேதம் குறைவாகவே உள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். இதுவரை 288 பேர் உயிரிழந்ததாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் புறப்பட்டு விட்டதாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications