ஒரே செகன்ட்டில் 2.1 கோடி பேர் "குளோஸ்".. இந்தியா, பாக். அணு ஆயுதப் போர் மூண்டால்!
டெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் போரில் இறங்கினால், அதுவும் இரு நாடுகளும் மொத்தமாக 100 அண் குண்டுகளைப் பயன்படுத்தினால் ஒரே விநாடியில் 2.1 கோடி மக்கள் உயிரிழப்பார்கள். அந்த அளவுக்கு அபாயகரமான முறையில் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளனவாம்.
இந்தியாவும், பாகிஸ்தானும் வைத்துள்ள ஒவ்வொரு அணுகுண்டும், ஹிரோஷிமாவில் அமெரி்க்கா போட்ட அணுகுண்டுக்குச் சமமானதாகும். மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு யுத்தத்தில் குதித்தால் ஓசோன் மண்டலத்தின் பாதி அழிந்து போய் விடுமாம். பல காலத்திற்கு உலகின் பல பகுதிகள் பூண்டோடு மக்கிப் போய் விடும். பருவ நிலைகள் தாறுமாறாகப் போய் விடும். உலகெங்கும் விவசாயம் அழிந்து விடுமாம்.

இப்போதைய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால் அது இரு நாடுகளை மட்டும் அழிக்காது, மாறாக உலகமே ஸ்தம்பித்துப் போய் விடும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.
nucleardarkness.org என்ற இணையதளம், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுகளின் அடிப்படையில் இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான போரால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் விலையைத் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வாய்ச்சவடால் பேர்வழிகள்
சுப்பிரமணியம் சாமி கடந்த செப்டம்பர் 23ம் தேதி பேசுகையில் பாகிஸ்தான் குண்டு போட்டு 10 கோடி இந்தியர்கள் இறந்தால், இந்தியா திருப்பித் தாக்கினால் மொத்த பாகிஸ்தானும் நாஸ்தியாகி விடும் என்று பேசியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் பதிலளிக்கையில் இந்தியாவையே நிர்மூலமாக்க விடுவோம் என்று கொக்கரித்திருந்தார். உண்மையில் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகமே கூட இந்த போரால் நிர்மூலமாகும் அபாயமே அதிகம்.
என்ன நடக்கும் தெரியுமா
இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும் என்பதை இந்த ஆய்வைச் சுட்டிக் காட்டி இந்தியா ஸ்பெண்ட் போட்டுள்ள கட்டுரை. உடனடியாக 2.1 கோடி பேர் பலியாவார்கள். இந்த உயிர்ப்பலியானது அடுத்த 9 ஆண்டுகளில் 2221 மடங்கு அதிகரிக்கும்.
உலகம் முழுவதும் 20 கோடி பேர் பாதிப்பு
இந்த அணு ஆயுதப் போரால் ஏற்படும் விளைவுகளால் உலகம் முழுவதும் 20 கோடி பேர் பாதிப்படைவார்கள். தட்பவெப்ப நிலை மாற்றம், பருவ நிலை மாற்றம், ஓசோன் மண்டல சேதம் ஆகியவை காரணமாக உலகின் பல பகுதிகளும் பாதிக்கப்படும்.
பாகிஸ்தானிடம் 130 குண்டுகள்.. இந்தியாவிடம் 100
2015ல் நடத்தப்பட்ட ஒரு கணிப்பின்படி பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு குண்டுகள் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிடம் அதை விட குறைவாக அதாவது அதிகபட்சமாக 120 குண்டுகள் இருக்கலாம்.
ஏவுகணைகளே அதிகம்
பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களில் 66 சதவீதம் ஏவுகணைகளில் பொருத்தக் கூடியவையாகும். பாகிஸ்தான் தன்னிடம் உள்ள 86 ஏவுகணைகளில் அணு ஆயுதங்களைப் பொருத்திய நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தானிடம் உள்ள ஹதிப் ஏவுகணைதான் மிகவும் அபாயகரமானது. இந்தியாவுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தக் கூடியது இது.
டெல்லி டூ சென்னை காலி
ஹதிப் ரக ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் நான்கு பெருநகரங்களான டெல்லி மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை முற்றிலுமாக தாக்கி அழிக்க பாகிஸ்தானால் முடியும். அதேபோல பெங்களூர் நகரையும் இந்த ஏவுகணையால் அழிக்க முடியும்.
இந்தியா முழுவதையும் தாக்க முடியும்
மேலும் காவ்ரி ரக ஏவுகணையால் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களை அதாவது டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, புனே, நாக்பூர், போபால், லக்னோ ஆகிய நகரங்களைத் தாக்க முடியும்.
ஷாஹீன்
அதேபோல ஷாஹீன் ரக ஏவுகணையால் 2500 கிலோமீட்டர் தூரம் வரையிலான இலக்குகளைத் தாக்க முடியும். கிழக்கில் உள்ள கொல்கத்தாவை இந்த ஏவுகணை மிக எளிதாக தாக்க முடியுமாம்.
காஸ்னவி
பாகிஸ்தானிடம் உள்ள காஸ்னவி ஏவுகணையானது லூதியானா, அகமதாபாத், டெல்லி வரை வந்து தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியுமாம். கஜினி முகம்மதுவின் பெயர்தான் இந்த ஏவுகணைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பால்கன்
அதேபோல பால்கன் ரக ஏவுகணை மூலம் டெல்லி, லூதியானா, ஜெய்ப்பூர்,அகமதாபாத் வரை தாக்க முடியுமாம். இந்த ரக ஏவுகணைகளால் 750 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்க முடியும்.
இந்தியாவின் பலம்
இந்தியா பிருத்வி, அக்னி ரக ஏவுகணைகளை நம்பியுள்ளது. இதில் இந்தியாவின் 53 சதவீத அணு ஆயுதங்களைப் பொருத்தி தாக்க முடியும். இதுதவிர சாகரிகா நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்படக் கூடிய ஏவுகணைகளையும் இந்தியா வைத்துள்ளது. இவற்றை ஐஎன்எஸ் அரிஹாந்த் கப்பலிலிருந்து இந்தியாவால் ஏவ முடியும். இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை.
நமக்கு இலக்கு சிறிதுதான்
நம்மைப் பொறுத்தவரை பெரிய எதிரி பாகிஸ்தான்தான். இலக்கு சிறிது, தூரமும் சிறிது. எனவே நம்மிடம் உள்ள ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானை முழுமைாக கவர் செய்ய முடியும். குறிப்பாக பாகிஸ்தானின் முக்கியநகரங்களான இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, லாகூர், கராச்சி, ராணுவ தலைமையகம் உள்ள நவ்ஷாரா ஆகியவற்றை எளிதாக தாக்க முடியும்.
ஆனால் சிக்கல் இருக்கு
இருப்பினும் நாம் லாகூர், கராச்சியில் அணுகுண்டு போட்டால் அது அவர்களோடு முடியாது. மாறாக இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கும் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பது நமக்குள்ள சிக்கலாகும்.
பிருத்வி போதும்
இிந்தியாவிடம் உள்ள பிருத்வியை வைத்து இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, சியால்கோட், லாகூர் ஆகிய நகரங்களைக் காலி செய்ய முட[ியும். அதேபோல அக்னி மூலமாக முல்தான், பெஷாவர், குவெட்டா, குவாடர் வரை தாக்கி காலி செய்யலாம்.
அழிக்க அக்னி போதும்
அக்னி 3, 4 மற்றும் 5 மூலமாக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் நிர்மூலமாக்க முடியும் என்கிறது இந்த ஆய்வு. ஆனால் அதன் விளைவு பாகிஸ்தானோடு மட்டும் நிற்காதாது, மாறக சீனாவையும் பாதிக்கும், இந்தியாவையும் பாதிக்கும்.
விமானப்படை
அதேபோல இந்தியாவின் விமானப்படை மூலமாக 45 சதவீத அணு ஆயுதங்களைப் பயன் படுத்த முடியும். ஜாகுவார் போர் விமானங்கள், மிராஜ் 2000 உள்ளிட்டவை இந்தியாவின் தாக்குதலுக்கு கூடுதல் பலம் சேர்ப்பவை.
யாருக்குமே புண்ணியம் இல்லை
எல்லாம் சரிதான்.. ஆனால் இந்தப் போரால் யாருக்குமே பலன் இருக்காது.. யாருமே இருக்க மாட்டோம் என்பதே கசப்பான உண்மையாகும். பாகிஸ்தானை அழிப்பதை விட திருத்துவதுதான் இந்தியாவுக்கு பலன் தரும் என்பதும் இன்னொரு கசப்பான உண்மையாகும். இந்த உண்மை தரும் தைரியத்தில்தான் அதுவும் ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications