For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துருப்புச் சீட்டு.. உச்ச நீதிமன்ற உத்தரவால் எதிர்க்கட்சிகள் குஷி.. மீண்டும் காஷ்மீர் செல்ல பிளான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Supreme Court issues a notice to the Centre

    ஸ்ரீநகர்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு மீண்டும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    கடந்த வாரம் காஷ்மீர் நிலைமையை பார்வையிட எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, கே சி வேணுகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா ஆகியோர் சென்றனர்.

    அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் தலைவர் தினேஷ் திரிவேதி, திமுக சார்பாக திருச்சி சிவா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தலைவர்கள் உடன் சென்றனர். குலாம் நபி ஆசாத் இந்த குழுவை வழி நடத்தினார்.

    இது முதல்படிதான்.. இனிமேல் பாருங்க.. காஷ்மீர் பிரச்சனையில் விஸ்வரூபம் எடுக்கும் ஷேலா ரஷீத்!இது முதல்படிதான்.. இனிமேல் பாருங்க.. காஷ்மீர் பிரச்சனையில் விஸ்வரூபம் எடுக்கும் ஷேலா ரஷீத்!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இவர் காஷ்மீருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோரையும் ராணுவம் நேற்று பாதியில் திருப்பி அனுப்பியது.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    இந்த நிலையில்தான் காஷ்மீரில் உள்ள உறவினர்களை மற்றும் கட்சி உறுப்பினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள உறவினர்களை, கட்சி உறுப்பினர்களை சந்திக்க சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    இதனால் மீண்டும் எதிர்கட்சித் தலைவர்கள் எல்லோரும் காஷ்மீர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காஷ்மீர் செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் காஷ்மீர் சென்று அங்கு இருக்கும் காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    காஷ்மீரில் உள்ள குடும்பத்தினரை, கட்சி உறுப்பினரை யாரும் சந்திக்க தடையில்லை. ஆனால் காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை செய்ய கூடாது, அரசியல் நடவடிக்கை மேற்கொள்ள மட்டும் தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இதனால் காஷ்மீரில் மக்களை சந்திக்காமல், அங்கு இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை மட்டும் சந்தித்து அவர்களிடம் இருந்து நிலைமையை தெரிந்து கொள்ள காங்கிரஸ் திட்டமிடுகிறது என்று கூறுகிறார்கள். இதற்காக நீதிமன்றத்தில் அனுமதி வாங்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஒரே துருப்புச்சீட்டு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The delegation of Opposition leaders may plan to visit the Kashmir again after SC order today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X