காஷ்மீரில்.. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் தந்தை தேசியக்கொடி ஏற்றினார்.. வைரல் வீடியோ!
ஜம்மு: இந்தியாவின் திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
மேலும் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலும் நமது தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

தேசியக்கொடி ஏற்றினார்
இதேபோல் ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் தந்தையான முசாபர் வாணி ஜம்மு-காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முசாபர் வானி புல்வாமாவில் ட்ராலில் உள்ள அரசுப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பயங்கரவாத தளபதி
அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தினம் கொண்டாடப்படும். அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் வேண்டும். இது தொடர்பான வீடியோவை வெளியிட வேண்டும் என்று மாநில நிர்வாகம் உத்தரவிட்டதன்படி முசாபர் வாணி தேசியக்கொடி ஏற்றினார். புர்ஹான் வானி பயங்கரவாத தளபதி ஆவான்.

ஹிஸ்புல் முஜாஹிதீன்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதமேந்திய தீவிரவாதியாக மாறியவன் புர்ஹான் முசாபர் வானி. இவனுக்கு சமூக வலைத்தளங்களில் இருந்த ஆளுமையை வைத்து 'ஹிஸ்புல் முஜாஹிதீன்' பயங்கரவாத தலைமை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்திய தீவிரவாதிகளாக மாற்றும் பணியை கடந்த 2011-ம் ஆண்டுவாக்கில் புர்ஹான் வானியிடம் ஒப்படைத்தது.

பலர் மூளைச் சலவை
அன்று முதல் மாநிலத்தில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களுக்கும் வானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இதனை தொடர்ந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவனாக வானி நியமிக்கப்பட்டான். அதன்பிறகு காஷ்மீரில் பயங்கரவாத இயக்கம் தலை தூக்கியது. பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பலர் மூளைச் சலவை செய்யப்பட்டனர்.

சுட்டுக்கொலை
இதனை அடுத்து ஸ்ரீநகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பும்டூரா என்ற கிராமத்தில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்த பயங்கரவாத தளபதி புர்ஹான் வானி ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஒருபிரிவினர் போராட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

அந்தஸ்து ரத்து
100 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தின் எதிரொலியாக ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பல மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதன்பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications