Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழங்குடி பெண் நிர்வாண ஊர்வலம்! கணவர், மாமியார் செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மாமியாரால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவிய நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "21 வயது மதிக்கத்தக்க பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இருப்பினும் இந்த திருமணத்தை தாண்டி அப்பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்ததாக பெண்ணின் மாமியார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

The incident of a tribal woman being taken naked in a procession in Rajasthan has caused a shock

இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அப்பெண்ணை மாமியாரும், திருமணம் செய்த கணவரும் தாக்கி வந்திருக்கின்றனர். இந்த தாக்குதலின் உச்சமாகதான் 31ம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வேறு ஆணுடன் இருந்த அந்த பெண்ணை மாமியாரும், கணவனும் வலுக்கட்டாயமாக தூக்கி வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அப்பெண்ணின் ஆடைகளை உருவி அவரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தவர்கள் அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இது தற்போது சோஷியல் மீடியாக்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரித்து இதில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்திருக்கிறோம். மேலும் கைது நடவடிக்கைகள் தொடரும்" என ராஜஸ்தானின் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) உமேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், "குடும்ப தகராறு காரணமாக ஒரு பெண்ணை அவரது மாமியார் நிர்வாணமாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஏடிஜியை சம்பவ இடத்துக்கு அனுப்பி இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை.இந்த குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விரைவு நீதிமன்றத்தால் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. எதிர்க்கட்சியான பாஜக, "ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு தேர்தலில் மக்கள் காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள்" என்று கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+