For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்றம் அதன் கடமையை செய்துள்ளது.. அப்பாவுக்கு ஜாமீன் கேட்போம்.. லாலு மகன் தேஜஸ்வி!

லாலு பிரசாத்தின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ராஞ்சி: நீதிமன்றம் தனது கடமையை செய்திருப்பதாக லாலு பிரசாத்தின் தண்டனை குறித்து அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மேலும் லாலுவின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

The judiciary performed its duty: Lalu's son Tejeshwi

இந்நிலையில் லாலுவின் தண்டனை குறித்து அவரது மகன் தேஜஸ்வி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது நீதிமன்றம் தனது கடமையை செய்திருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

மேலும் தண்டனை விவரத்தை படித்து பார்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். லாலுவுக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்றும் தேஜஸ்வி கூறினார். தேஜஸ்வி பீகாரின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lalu's son Tejeshwi says, the judiciary performed its duty. We will go to the High Court after studying the sentence and apply for a bail on fodder scam sentence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X