கார் விபத்து வழக்கில் சல்மான்கானின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மனு
மும்பை: நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கில் இருந்து நடிகர் சல்மான் கானை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு நேற்று மனுத் தாக்கல் செய்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு, இரவு நேரத்தில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த சல்மான் கான், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அவரை விடுதலை செய்தது.
இது நாடு முழுவதும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சல்மான் கானின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அரசுத் தரப்பு ஆதாரங்களை பயன்படுத்துவதில் மும்பை உயர்நீதிமன்றம் தவறியிருக்கிறது. விசாரணை நீதிமன்றம் சல்மான் கானுக்கு அளித்த தண்டனை சரியானது. அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications