மறக்க முடியாத ரஞ்சன் கோகோய்.. மரணத்திலிருந்து தப்பிய கோவிந்தராஜ்.. மரித்து போன செளமியா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்- வீடியோ

    டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி ரஞ்சன் கோகோய் சில வருடங்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பு ஒன்று நாடு முழுவதும் விவாதங்களை எழுப்பியது. அதுகுறித்த ஒரு பிளாஷ்பேக்.

    எர்ணாகுளம் - ஷோரனூர் இடையிலான ரயில் அது. பெண்களுக்கான சீட்டில் 23 வயதுடைய ஒரு இளம் உட்கார்ந்து கொண்டிருந்தார். படித்த பெண். கொச்சியில் ஒரு ஷாப்பிங் மாலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர். ரயில் அப்போது மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

    பெண்கள் வகுப்பு பெட்டியில் சௌமியா மட்டும் தனியாக இருப்பதை கண்ட கோவிந்தசாமி என்ற காம வெறி மிருகம் மெல்ல சௌமியாவை நெருங்கியது. சௌமியாவை மேலும் கீழும் உற்று உற்று பார்த்த கோவிந்தராஜ், படாரென சௌமியாவை பிடித்து ரயிலிலிருந்து வெளியே தள்ளினார். அதோடு கூடவே கோவிந்தராஜூம் ரயிலுக்கு வெளியே குதித்தார்.

    [ரயிலிலிருந்து தள்ளி பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை ரத்து! ]

    பரிதாப மரணம்

    பரிதாப மரணம்

    கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்த சௌமியாவை அங்கிருந்த புதர்கள் நிறைய உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கி சென்றார் கோவிந்தராஜன். நிலைகுலைந்து கிடந்த சௌமியாவை நாசம் செய்தார்... உடலெங்கும் காயங்கள், ரத்த கீறல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌமியா சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    தப்பிய கோவிந்தராஜ்

    தப்பிய கோவிந்தராஜ்

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, கோவிந்தசாமிக்கு 302-வது செக்‌ஷன்படி மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பினை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் ஒரு பெண்ணை இப்படி பாழாக்கி கொன்றுவிட்டோமே என்ற உறுத்தலே இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கோவிந்தராஜ்.

    376-வது பிரிவு

    376-வது பிரிவு

    இதனை மூவர் கொண்ட அமர்வு விசாரித்தது. அந்த மூவரில் ஒருவர்தான் தற்போது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள ரஞ்சன் கோகாய். பிசி பந்த், யுயு லலித் ஆகியோரும் அடங்கிய இந்த பெஞ்ச், விசாரணைக்குப் பின்னர் கோவிந்தராஜுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து வெறும் ஆயுள் தண்டனையாக அதாவது 376-வது பிரிவின் கீழ் தண்டனையை குறைத்தது.

    மரண தண்டனை இல்லை

    மரண தண்டனை இல்லை

    தீர்ப்பின்போது நீதிபதி ரஞ்சன் கோகோய் அளித்த விளக்கம், "கொலை செய்யும் நோக்கம், அல்லது மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தெரிந்தே அதை செய்தால்தான் இபிகோ 302, அதாவது மரண தண்டனை. ஆனால் கோவிந்தசாமி சௌமியாவை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறாரே தவிர கொலை செய்யும் நோக்கில் இல்லை. அதனால் கோவிந்தசாமிக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்று கூறினார்.

    கண்டனங்கள், எதிர்ப்புகள்

    கண்டனங்கள், எதிர்ப்புகள்

    ரஞ்சன் கோகாய் பெஞ்ச் அளித்த தீர்ப்பு நாடெங்கும் விவாதங்களை எழுப்பியது. ஊடகங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாடின. மாதர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை வீசினார்கள். தீர்ப்புக்கு எதிராக பினராயி விஜயன், அச்சுதானந்தன், மார்க்கண்டேய கட்ஜு கொதித்தெழுந்து கருத்துக்களை சொன்னார்கள். இதல் கட்ஜு ஒரு படி மேலே போய், "சட்டக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு கூட செவிவழி சொல்வதை வைத்து சாட்சியமாக ஏற்க கூடாது என்று தெரியும்" என்று பதிவிட்டார்.

    ரஞ்சன்கோகாய்

    ரஞ்சன்கோகாய்

    கட்ஜூவின் இந்த பேச்சு நீதிமன்றம் வரை சென்றது. சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பியது. நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக பேசிவிட்டீர்கள் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது, காரசார விவாதமும் இரு தரப்பிலும் நடந்தது. இதையடுத்து கட்ஜூ மன்னிப்பு கேட்டார். செல்லமாக வளர்த்த ஆசை மகள் சௌமியாவை பறிகொடுத்த தாய், தீர்ப்பினை எதிர்த்துமேல் முறையீடு செய்தார். அந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிபதி ரஞ்சன்கோகாய் உள்ளிட்ட பெஞ்ச்தான். இப்படி பரபரப்பான தீர்ப்பினை அளித்த பெஞ்ச்சில் இடம் பெற்றவர் ரஞ்சன் கோகோய்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+