மகாராஷ்டிராவில் அவ்வளவு வெயிலுக்கு சான்ஸ் இல்லையே.. வானிலை ஆய்வு மையம் விசாரணை
மகாராஷ்டிரத்தில் வழக்கத்துக்கு மாறாக 116 பாரன்ஹீட் வெப்பநிலை என்பது தவறாக பதிவாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் வானிலை ஆய்வு மையம் விசாரணை நடத்தவுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் பிர்ராவில் 116 பாரன்ஹீட் வெப்பநிலை என்பது தவறாக பதிவாகியிருக்குமோ என்று சந்தேகத்தின்பேரில் வானிலை மைய அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று நாட்டின் மற்ற பகுதிகளை விட வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. அம்மாநிலத்தின் ராய்குட் மாவட்டத்தின் பிர்ரா டவுனில் வெப்பநிலையில் 116 பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. செல்சியஸில் 46.5 டிகிரியாகும்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், தெற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் 100 பாரன்ஹீட்டாக வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் வெப்பம் தகித்து வந்தாலும் வழக்கத்துக்கு மாறாக இந்தளவு வெப்பநிலை பதிவாக வாய்ப்பில்லை என்பதால் அந்தளவு வெப்பநிலையானது தவறாக பதிவாகியிருக்குமோ என்று வானிலை மைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கையில், பிர்ராவில் கடந்த திங்கள்கிழமை 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்தது. செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் அன்று வெப்பநிலை பதிவாகவில்லை. இந்நிலையில் பிர்ராவில் 46.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக கூறப்படுவதில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதன் அருகில் உள்ள இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகவில்லை. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம்.
மேலும் பிர்ரா கிராமமானது அணைக்கு அருகே உள்ளது. அதைச்சுற்றி குறைந்தபட்சம் 2000 அடி உயரத்திலாலான மலைகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் அங்கு 46.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது சந்தேகமளிப்பதாக தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications