Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுட்டித்தனம் செய்த ஸ்வேரா... பெற்ற பிள்ளையை பிளேடால் அறுத்து கொன்ற பேய்

Subscribe to Oneindia Tamil

நாசிக்: சுட்டித்தனமாக விளையாடிய குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்து கொன்று விட்டு நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்ற தாயே இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அந்த இளம் பிஞ்சின் பெயர் ஸ்வேரா என்பதாகும். யோகிதா முகேஷ் பவார் தம்பதியின் மகள் ஸ்வேரா 14 மாத பச்சிளம் குழந்தை. கொள்ளை அழகு. கூடவே சுட்டித்தனம் அதிகம். அந்த சுட்டிக்குழந்தை ரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். அதைப்பார்த்த யோகிதா போலீசில் புகார் அளித்தார்.

The mother 14 year old slitting throat in Nashik

தகவலறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்ததில், தான் குப்பை போட கீழே சென்றதாகவும் வந்து பார்த்தால் குழந்தை கழுத்து அறுபட்டு இருப்பதாகவும் தான் திரும்பி வந்ததும் தன்னையும் தாக்க வந்ததாகவும் போலீசில் யோகிதா தெரிவித்தார்.

ஆனால் யோகிதா கூறுவதில் சந்தேகப்பட்ட காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்ததில் யோகிதாவிற்கும் குழந்தையை கொன்றவனுக்கும் எந்த வித முன் விரோதமும் இல்லை என்று தெரியவந்தது. வீட்டில் எந்த ஒரு விலையுயர்ந்த பொருளும் இல்லை என்பதை கண்டுபிடித்த போலீஸாரின் கவனம் யோகிதாவின் மேல் திரும்பியது. பதட்டமான நிலையில் இருந்த யோகிதாவை கண்காணித்த போது தான் குழந்தையை அவர்

கொன்றது என்பது தெரிய வந்தது.

14 மாத குழந்த சுட்டித்தனம் செய்வதே ஒரு தனி அழகு தானே. ஆனால் யோகிதா அந்த குழந்தையின் அழகையும் சேட்டைசெய்வதையும் ரசிக்காமல் மிருக மனம் கொண்ட யோகிதா தனக்கு தொல்லை தருவதை தாங்க முடியாமல் அந்த குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்திருக்கிறார்.

கட்டிடத்தின் ஒரு லிப்ட்டில் ஒரு ரத்தக் கறையுடன் ஒரு பிளேடு இருந்ததும் அது யோகிதாவின் ரத்தத்துடன் பொருந்தியுள்ளதாக போலீஸார் கூறினர். இதையடுத்து யோகிதா புதன் கிழமை கைது செய்யப்பட்டார். யோகிதாவின் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கை கையாளும் போது அந்த பெண்ணின் தினசரி நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என காவல் துறையினர் கூறியுள்ளனர். பட்டு குழந்தையின் சங்குக்கழுத்தை அறுத்துக்கொள்ள எப்படித்தான் மனசு வந்ததோ அந்த பேய்க்கு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+