சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! மம்தாவின் சர்ச்சை கருத்து! முதல்வராக இருக்க தகுதி இல்லை என ஆவேசம்
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர் என நிர்பயாவின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் மகன் பிறந்தநாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் பின்னர் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி
இந்த வன்கொடுமை வழக்கு தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரான சமர் என்பவரது மகன் சோஹைலை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை அங்கிருந்த சோஹேல் மற்றும் அவரது நண்பர்கள் மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அவரது வீட்டில் இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.

மம்தாவால் சர்ச்சை
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி," இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையா? அல்லது கர்ப்பமா? அல்லது காதல் விவகாரமா? எப்படி அழைப்பீர்கள் என போலீசாரிடம் நான் கேட்டேன். இது மோசமான சம்பவம். கைது நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த சிறுமிக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே காதல் இருந்துள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. என்றார்

கடும் கண்டனம்
மேலும், இது உண்மையிலேயே பாலியல் வன்கொடுமையா? அல்லது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தாரா? அல்லது இது காதல் விவகாரமா? எனவும் அவர் கூறினார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைச் சேர்ந்தவர்கள் என்பதால், மம்தா அவர்களை காப்பாற்ற முயல்வதாகக் கூறினர். இந்நிலையில் மைனர் சிறுமிபலாத்கார வழக்கு தொடர்பாக மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பதிலளித்த நிர்பயாவின் தாய் , இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தால் மம்தா பானர்ஜி முதல்வராக தகுதியற்றவர் என்று கூறினார்.

தாய் கேள்வி
இதுகுறித்து பேசிய அவர், அத்துமீறப்பட்ட ஒரு பாதிக்கப்பட்டவரைப் பற்றி இதுபோன்ற கருத்துக்களைக் கூறினால் அவர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அல்ல , ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதுபோன்ற கருத்துகளை கூறினால், தான் வகிக்கும் பதவிக்கு அது பொருந்தாது அத்தகைய கருத்துக்கள் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறது, அது பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கிறது மற்றும் இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கிகளுக்காக மட்டுமே கவலைப்படுகிறார்கள் என கடுமையாக மம்தாவை பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications