கிராமத்து பெண்களை ஏமாற்றி டெல்லி சிவப்பு விளக்கு பகுதியில் விற்கும் அந்த 'ராஜு' யார்?

டெல்லியில் உள்ள பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடக்கும் இடங்களில் இருந்து போலீசார் பல பெண்கள் மற்றும் பதின்வயது பெண்களை மீட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கூறுகையில், தங்களுக்கு டெல்லியில் வேலை வாங்கித் தருவதாக, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ராஜு என்ற நபர் தான் தங்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஜிபி ரோட்டில் இருந்து மீட்கப்பட்ட பெண்களில் ஏராளமானோர் தங்களை இந்த தொழிலில் தள்ளிவிட்டது ராஜு தான் என்று தெரிவித்துள்ளனர். ஜிபி ரோட்டில் மட்டும் 92 இடங்களில் பாலியல் தொழில் நடந்து வருகிறது. அங்கு 3,500 பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில பெண்களை டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது இந்த ராஜு தான். ராஜு என்பது ஒரு ஆளா, அல்லது பலர் அந்த பெயரை பயன்படுத்துகிறார்களா என்று போலீசாருக்கே புரியவில்லை.
இதுவரை ராஜுவின் புகைப்படம் சிக்கவே இல்லை. மீட்கப்பட்ட பெண்களுக்கும் அவனை சரியாக அடையாளம் கூறத் தெரியவில்லை. அவன் பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து அவர்களை பாலியல் தொழில் நடத்துவோரிடம் ரூ.20,000 முதல் ரூ.5 லட்சம் வரை விற்றுவிடுகிறானாம்.
மைனர் பெண்கள் அதுவும் நேபாள பெண்களை அதிக அளவில் இந்த தொழிலில் ஈடுபடுத்துகிறார்களாம். காரணம் அவர்களின் சிவந்த மேனி. டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பாழும் தொழிலில் தள்ளிவிடப்படும் பெண்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், இந்தி தெரியாதவர்களாகவும் உள்ளனர்.
போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ராஜுவை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications