கோவாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ்- பாஜக கடும் போட்டி- சிறிய கட்சிகளுக்கு 'மவுசு'!
கோவாவில் பாஜக, காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க இரு தேசியக் கட்சிகளும் அங்குள்ள சிறிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பனாஜி: கோவாவில் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால் புற வாசல் வழியாக ஆட்சி அமைக்க பாஜகவும், காங்கிரஸும் தமக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிய கட்சிகளிடம் பேரம் நடத்தி வருகின்றன.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏ-க்களின் ஆதரவும், பாஜகவுக்கு 9 எம்எல்ஏ-க்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. இதனால் தலா 3 இடங்களைப் பெற்ற கோவா முன்னணி கட்சி(ஜிஎஃப்பி) , மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி (எம்ஜிபி), சுயேட்சைகள் ஆகியோரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக தேசியக் கட்சிகள் முழு வீச்சில் பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கோவா முன்னணி கட்சி
கோவா முன்னணி கட்சியில் வெற்றி பெற்றுள்ள 3 பேருமே முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள். இந்த 3 பேரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருக்கிறது.

எம்ஜிபி
எம்ஜிபி கட்சியும் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அக்கட்சியும் காங்கிரஸ் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கு சுயேட்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவு உள்ளது.

சுயேட்சைகள்
வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்களில் ரோஹன் கான்டே காங்கிரஸுக்கும், கோவிந்த் காவ்டே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றொரு சுயேட்சையான பிரசாத் கோயங்கரின் முடிவு கோவாவில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

காங். வாய்ப்பு?
எம்ஜிபி கட்சியினரும், சுயேட்சைகளான கான்டே மற்றும் கோயங்கரும் பாஜகவை ஆதரித்தால் பாஜக ஆட்சி அமைக்கும். ஒரு வேளை எம்ஜிபியும், கோவா முன்னணி கட்சியும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தால் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
மதில் மேல் உள்ள பூனை எந்த பக்கம் சாயும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications