இனிமேல் ரயிலில் பயணம் செய்ய ஒரு மாதத்திற்கு 6 முறைதான் பதிவு செய்ய முடியும் !
டெல்லி: இனிமேல் ரயிலில் பயணம் செய்ய ஒரு மாதத்திற்கு 6 முறை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற புதிய முறையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்பெல்லாம் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்வதற்கு ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் பல நேரங்களில் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில நேரங்களில் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.

பிறகு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ரயில்வே நிர்வாகம் இ-டிக்கெட் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இதனால் இணைய வசதி கொண்டோர் தங்கள் வீட்டிலிருந்த படியே தாங்கள் பயணம் செய்யும் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் ஒரு சிலர் இந்த இ-டிக்கெட் முறைகளையும் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஒருவர் ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசி-யில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு 10 முறை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் சமீப காலமாக பெரும்பாலான பயனாளர்கள் 6 தடவைக்கு மேல் பயணம் செய்ய முன்பதிவு செய்தது கிடையாது. சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே 6 முறைக்கு மேல் பயன்படுத்துகின்றனர். இந்த 10 சதவீதமும் முறைகேடாக புக் செய்ய வாய்ப்பு உள்ளதாக சந்தேகப்படுவதாக கூறப்படுகிறது.
பாஸ்போர்ட் வாங்குறதை சுலபமாக்கிட்டு ரயில் டிக்கெட் வாங்குறதை சிரமமாக்கிட்டாங்க
— காட்டுப்பயல் (@sundartsp) January 29, 2016 இதை கட்டுப்படுத்த ரயில்வே அமைச்சம் புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வெப்சைட்டில் கணக்கு வைத்திருப்போர் ஒரு மாதத்திற்கு 10 முறை டிக்கெட்டுக்கள் முன்பதிவுகள் செய்யலாம். அதை தற்போது 6 முறையாக குறைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற பிப்ரவரி 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு அக்கவுண்டுக்கு இரண்டு டிக்கெட்டுக்களும், தக்கல் நேரத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரையும் இரண்டு டிக்கெட்டுக்கள்தான் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications